வியாழன், 13 அக்டோபர், 2016

குருடாயில் விலையும், இயற்கை எரிவாயு விலையும்

அமெரிக்க தேர்தல் கம்மாடிட்டி சந்தையில் போக்கை மாற்றி இருக்கிறது. அமெரிக்க காபந்து அரசு எந்த முக்கியமுடிவும் எடுக்க முடியாது, அறிவிக்கவும் முடியாது என்பதால் இந்த நேரத்தை ரஷ்யாவும், OPEC நாடுகளும் நன்கு பயன்படுத்திகொண்டுள்ளது. ஆகவேதான் குருடாயில் விலையும், இயற்கை எரிவாயு விலையும் ஏற்றம் காண்கிறது. தங்கம் கீழே அதிகமாகவும், மேலே சற்று எழுந்தும் செல்கிறது.

வரும் வாரம் முழுக்க இப்படிதான் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். குருடாயில் விலை ஐம்பதை தாண்டி ஒருவாரமாக சென்று கொண்டிருக்கிறது. OPEC நாடுகளின் செய்திகள் மட்டுமே இந்த குறுகிய காலத்தில் எடுபடும். அமெரிக்க வேலைவாய்ப்பு புள்ளி, குருடாயில் கையிருப்பு புள்ளிகள் எல்லாம் பெரிதாக வேலை செய்யாது. 

இன்று குருடாயில் மேலே தான் செல்லும். இயற்கை எரிவாயு சற்று கீழே இறங்கிவிட்டு மேலே செல்வார்கள். தங்கம் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் நூறு புள்ளிகள் கீழே இறங்கும். வெள்ளி முன்னூறு புள்ளிகள் இறங்கலாம். இன்று எந்த முக்கிய வணிக செய்திகள் பகல் பொழுதில் இல்லை என்பதால் பெரிய ஏற்றம் இறக்கம் இருக்காது. 

இன்று மாலை குருடாயில் எந்த திசையில் செல்கிறதோ அந்த திசையில் POSITION செல்வது நல்லது. திங்கள் கிழமை உங்களுக்கு நல்ல விலை கிடக்கும் விற்றுவிடுங்கள்.

அவ்வப்போது நடக்கும் தகவல்களை அறிய இந்த ஆப்பை தரவிறக்கி கொள்ளுங்கள். 

https://play.google.com/store/apps/details?id=com.fastura.mcx

புதன், 12 அக்டோபர், 2016

தங்கமும் வெள்ளியும் வீழும் மேலும்

தங்கத்தின் விலை இறங்கி வருகிறதே மீண்டும் மேலே ஏறும் என்று நினைத்து mcx இல் Buy போவது நல்லதல்ல. அது மீண்டும் மீண்டும் இறங்கவே  செய்யும்.

தங்கத்தில் போட்ட முதலீடுகள் அனைத்தையும் Forex சந்தையிலும், பங்கு சந்தையிலும் முதலீடு செய்வார்கள். இது ஒருபுறம் என்றால் மறுபுறம் சர்வதேச நாடுகள் தங்களின் கையிருப்பில் உள்ள தங்கத்தை சந்தைக்கு திறந்துவிடும் காலமும் இதுதான் என்பதால் சந்தையில் தங்கத்தின் விலை மேலும் மேலும் சரியவே கூடும். இன்னுமொரு காரணம் அமெரிக்க தேர்தல். இந்த நேரத்தில் அமெரிக்க ஒரு காபந்து அரசு மட்டுமே. எந்த பொருளாதார முடிவுகள் எதுவும் எடுக்கமாட்டார்கள்.

அமேரிக்கா சும்மா இருந்தாலே சர்வதேச நாடுகளுக்கு தானாக பலன்கிடைக்கும் என்ற கணிப்பின் படியும் தங்கம் இறங்கவே செய்யும். அதே காரணத்தினால் தான் குருடாயிலின் விலையும் மேலே ஏறும். அமெரிக்க அரசு அதிகாரத்தில் இருக்கும்போது அவர்கள் குருடாயிலின் விலையை குறைக்கவே முயல்வார்கள். காபந்து அரசினால் எதுவும் செய்ய முடியாது என்பதால் opec நாடுகளின் முடிவு செல்லுபடியாகிறது.

நவம்பர் 15 வரை குருடாயில் மேலே ஏறவே செய்யும். தங்கம் கீழே இறங்கவே செய்யும்.  

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

இழுத்துக்கோ பறிச்சுக்கோ

கடந்த மூன்று வாரங்களாக இந்தப் பக்கத்தில் எதுவும் எழுத முடியவில்லை. மேலும் சந்தையின் போக்கும் மிக மோசமான அளவிற்கு எழுச்சியும் வீழ்ச்சியும் இருந்தது.

தங்கம் ஒரே நாளில் 600 புள்ளிகள் ஏறுவதும் இறங்குவதும், வெள்ளி 1500 புள்ளிகள் வரை ஏறவும் இறங்கவும் இருந்தது. செப்டெம்பர் மாதம் எப்பொழுதும் வீழ்ச்சியை காணும் தங்கமும், வெள்ளியும் இந்த வருடம் பெரும் எழுச்சியை கண்டது. காரணம் உலக பங்குசந்தையின் மந்த நிலையும், தொழில் வீழ்ச்சியுமே ஆகும். ஸ்திரமான ஆசிய சந்தை கூட இந்த மாதத்தில் தள்ளாடுகிறது. ஆக இதன் எதிரொலியாக தங்கத்திலும், வெள்ளியிலும், காப்பரிலும் முதலீடு அதிகரிக்கிறது.

காப்பர் ஏற வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அதனின் தேவை குறைந்துவிட்டது. இந்த நிலையில் தங்கத்தின் மீதான டிமாண்ட் காப்பரிலும் எதிரொலிக்கிறது.


குருடாயில் வர்த்தகத்தை Tug of Warஇல் ஒருபுறம் அமெரிக்காவும் மறுபுறம் ரஷ்யா, அரபுநாடுகள், வெனிசுலா போன்றவை மறுபுறமும் இழுக்கின்றன. இதில் சவூதி அரேபியா இருபுறம் நகர்ந்து ஜோக்கர் வேலையை பார்க்கிறது. ஆக குருடாயில் வர்த்தகம் ஒரு கண்ணாமூச்சியை நடத்துகிறது. பகலில் Buy செல்லுங்கள், இரவு 8.20 க்கு மேல் எத்தனை பொசிஷன் இருந்தாலும் வெளியில் வந்துவிடுவது நல்லது.

நேச்சுரல்கேஸ் பாதுகாப்பான வர்த்தகமாக இருக்கிறது. தினமும் நாலு புள்ளிகள் நகர்கிறது. உச்சியை தொட்டுவிட்டு கீழே இறங்கும் அல்லது அடியை தொட்டுவிட்டு மேலே ஏறும். நடுவில் Direction மாறாமல் ஒரே திசையில் செல்கிறது

பேஸ் மெட்டல்ஸ் ரெம்பவும் மேலே ஏறாது. ஆக மேலே வரும்போது Sell போவது நல்லது.

புதன், 7 செப்டம்பர், 2016

சதிராடும் குருடாயில்



கடந்த ஒரு மாதமாகவே குருடாயில் வர்த்தகத்தில் ஒரு தேக்கநிலையும் குழப்பமும் நிலவுகிறது. நாங்கள் எங்களுக்கு வரும் வர்த்தக செய்திகளின் அடிப்படையில் தான் ஆலோசனைகள் கொடுப்போம்.




சமீப காலமாக ரஷ்யா மற்றும ஆயில் உற்பத்தி நாடுகள் ஒருபுறமும், அமெரிக்கா ஒருபுறமும் கடும் பூசலில் இருக்கிறார்கள். சிலகாலம் முன்பு வரை எங்களுக்கு வரும் செய்திகள் எல்லாம் ஒரே திசையில் இருக்கும். இப்போது குருடாயில் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளோம் என்று OPEC Secretary General Mohammed Barkindo ஒரு புறம் சொல்வார். அதையே ரஷ்ய எனர்ஜி மினிஸ்டரும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று சொல்வார். ஆக குருடின் விலை ஏறப் போகிறது என்று நினைக்கும்போது சத்தமில்லாமல் அமெரிக்கா உப்புசப்பில்லாத காரணங்களால் ( US Job Claims Index Rise, Canadian Forex Rise) விலையை இறக்குவார்கள்.

நேற்று குருடாயில் ஸ்டாக் inventory ரிப்போர்ட் வரப்போகிறது என்று 8 மணிவரை காத்திருக்க கடந்த திங்கள் அமெரிக்க அரசு விடுமுறை என்பதால் இன்று இரவு எட்டு மணிக்கு வெளியாகும் என்கிறார்கள்.


அமெரிக்க அரசின் ஒரே நோக்கம் ரஷ்யாவின் வர்த்தகத்தை முழுமையாக வீழ்த்தி கிரிஸ்ஸின் நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்று வீம்பாக குருடாயிலை ஏறாமல் பார்த்துக்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இதற்கு அமெரிக்காவிற்கு தோள் கொடுத்த அரபு நாடுகளும் பொருளாதார சிக்கலை சந்திப்பதால் இப்போது உற்பத்தியை குறைக்கிறார்கள். இருந்தபோதும் ப்ரென்ட் ஆயிலின் உதவியால் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இந்த விலைக்குறைப்பு பிற இறக்குமதி நாடுகளுக்கும் சாதகமாக இருப்பதால் அமெரிக்காவிற்கு பெரிய எதிர்ப்பு இல்லை.

இந்த நிலையற்ற தன்மையின் காரணமாகவே கடந்த சில நாட்களாக நாங்கள் எந்த செய்தியையும் இங்கு பதியவில்லை. எங்கள் ஆப்பில் கொடுத்த callsகளும் தோல்வியை தழுவின.

வரும் 26 முதல் 28க்குள் ரஷ்யா தலைமையிலான ஆயில் உற்பத்தி செய்யாத நாடுகளுடன் சவூதி தலைமையிலான ஆயில் உற்பத்தி நாடுகள் கலந்தாய்வு நடத்த உத்தேசித்து இருக்கிறார்கள். அதுவரை இந்த குழப்பம் நீடிக்கும் என்று தான் சொல்கிறார்கள். மறுபுறம் அமேரிக்கா என்ன சதி செய்ய காத்திருக்கிறது என்று மர்மமாக உள்ளது

இன்று இரவு வரை குருடாயில் வர்த்தகத்தில் எந்த பெரிய மாற்றமும் இருக்காது. ஆகவே இரவு ஒரு புதிய பதிவு இடுவோம்

வியாழன், 1 செப்டம்பர், 2016

குருடாயில் அரசியல்

குருடாயில் அரசியல் மிகவும் சூடு பிடித்திருக்கிறது. ஒரு பக்கம் அமேரிக்கா, இன்னொரு பக்கம் ரஷ்யா, சவுதி, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் ( OPEC) . இந்த இரண்டுக்கும் நடுவிலான போட்டியில் அமெரிக்காவின் கரம் இப்போது ஓங்கி இருக்கிறது

நேற்று இரண்டு செய்திகள் பகலில் வந்தது. OPEC நாடுகள் கடந்த இரண்டாண்டுகளாக சந்தித்துவரும் பொருளாதார சரிவை மீட்க குருடாயிலின் உற்பத்தியை குறைத்தாக வேண்டிய சூழல் இருக்கிறது என்று கூட்டமைப்புகளின் செய்தி தொடர்பாளர் சொல்கிறார்.


மற்றொரு செய்தி குருடாயில் 45$க்கும் கீழே சென்றதால் அதன் லெவலை தொட மீண்டும் 45$ தொட மேலே எத்தனிக்கும் என்று. இந்தஇரண்டு செய்திகளும் நிச்சயம் குருடாயிலை ஏற்றி இருக்க வேண்டும்.

ஆனால் நேற்று நடந்ததே வேறு. குருடாயில் கீழே தள்ளப்பட்டது USD/CAD டாலர் விலை கடந்த மூன்று வாரத்தில் அதிக உச்சம் கண்டதும், US Jobless Claim Index மேலே உயர்ந்தது குருடாயிலை மேலும் கீழே தள்ளியது. இது அத்தனையும் அமெரிக்க அரசின் சித்து விளையாட்டுக்கள்.

இன்று ஆசிய சந்தையில் சின்னதாக ஏற்றம் கண்டாலும் இது கீழே தான் இறங்கக்கூடும். அப்படி ஒரு முடிவோடு செயல்படுகிறது அமெரிக்க சந்தை

நேற்று நாங்கள் கொடுத்த கால்ஸ் இரண்டும் சொதப்பியதன் பின்னணி இது தான். ஸ்டாப் லாஸ் வைத்ததால் பெரிய நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடிந்தது.

இன்று தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது. நூறு புள்ளிகள் கீழே இறங்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. மாலை மேலே நூற்றி இருபது புள்ளிகள் ஏறக்கூடும்

புதன், 31 ஆகஸ்ட், 2016

குருடாயில் எழுச்சி காணுமா இன்று

நேற்று அமெரிக்காவின் குருடாயில் இருப்பு தேவைக்கும் அதிகமாக நிறைய இருப்பதாக வரவும் குருடாயில் விழ ஆரம்பித்தது. பிறகு அமெரிக்க வர்த்தகர்களின் பொருளாதார நம்பிக்கை கணக்கெடுப்பு சாதகமான முடிவை கொடுத்ததால் குருடாயில் மேலும் விழக் காரணமாக இருந்தது. இன்று ஆசிய சந்தை குருடாயில் ஏறும் என்ற நம்பிக்கையில் இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி வருகிறது.  3100 ஐ உடைத்தால் மேலும் கீழே இறங்கி 3060 இல் சென்று முடியும். மேலும் இன்று இரவு Inventory இருக்கிறது. அது சமயம் மேலும் கீழும் 40 புள்ளிகள் ஏறி இறங்கும். எப்படி இருந்தாலும் கீழே தான் முடிப்பார்கள் என்று நம்பப்படுகிறது

காப்பர் தினமும் 1.5 புள்ளிகள் என குறைந்துகொண்டே வருகிறது. இது இன்னும் குறையும். மாலை சற்று ஏறலாம். காரணம் Aug Contract இன்றோடு முடிவதால் இதில் எடுத்து அடுத்த மாத Contract இல் போட வாய்ப்புண்டு.

காப்பர் மட்டுமல்ல, அனைத்து உலோக கம்மாடிட்டிகளும் இன்றுடன் காண்ட்ராக்ட் முடிவதால் மாலைக்கு பிறகு ஏறத்துவங்கலாம்

தங்கம் நாங்கள் முன்பே சொன்னதை போல விழ ஆரம்பித்து விட்டது. இனி செப்டெம்பர் மாதம் முழுதும் விழப் போகிறது

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

MCX இல் கணக்கு தொடங்குவது எப்படி

MCX எனப்படும் பொருள் வணிகத்தில் வர்த்தகம் செய்ய தனியே கணக்கு தொடங்கவேண்டும். பங்கு வர்த்தகத்தில் உள்ள Demat கணக்கு இதற்கு பொருந்தாது

இந்தியா முழுக்க 2400க்கும் அதிகமான Brokerage Companyகள் MCX இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்றில் கணக்கை தொடங்கலாம்.

அதற்கு பின்வரும் ஆவணங்கள் உங்களிடம் இருக்க வேண்டும்

1. Address Proof
2. Id Proof
3. Pan Card
4. Cancelled Cheque / Recent Bank Statement
5. Photo

Cancelled Cheque - என்பது உங்கள் வங்கி காசோலையை குறுக்கே அடித்து CANCELLED என்று பெரிதாக எழுதவேண்டும்.

இவற்றுடன் நீங்கள் கணக்கு தொடங்கும் Brokerage Companyயின் விண்ணப்பபடிவத்தையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

பொதுவாக Brokerage Companyகளை அணுகினால் அவர்களின் விற்பனை பிரதிநிதிகள் உங்களை தேடிவந்து அனைத்தையும் செய்து கொடுப்பார்கள்.

பெரிய Brokerage கம்பெனிகள் இதற்கு தனியே உங்களிடம் கட்டணம் வசூலிப்பார்கள். Brokerage Charge மிக அதிகமாக சொல்வார்கள்.
0.03% முதல் 0.07% வரை சொல்வார்கள்.

இன்னும் சில கம்பெனிகள் முன்னரே உங்களிடம் Brokerage Commission 5000 முதல் 10000 வரை வாங்கிகொள்வார்கள். அதற்கு 0% brokerage என்று சொல்வார்கள். ஆனால் எதுவும் ஜீரோ அல்ல, தந்திரம். நீங்கள் வர்த்தகம் செய்தாலும் செய்யாவிட்டாலும் ஒரே வர்த்தகத்தில் நீங்கள் வெளியேற முடிவு செய்தாலும் இந்த advanced brokerage commission திரும்பி வரவே வராது.

போதாதென்று உங்களிடம் Margin Cheque ஒன்றையும் வாங்கி கொள்வார்கள். அதாவது ஒரு அதிரடி இறக்கத்தில் மாட்டி உங்கள் கணக்கில் உள்ள தொகை அத்தனையும் கழிந்தது போக மைனஸ்ஸில் சென்றால் அதை பைசா மிச்சமில்லாமல் கறந்துவிடுவார்கள். தப்பித்தவறி கூட அவர்களுக்கு நஷ்டம் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அதில் தவறில்லை தான். ஆனால் சில சமயம் அவர்கள் தரப்பில் தவறுகள் இருந்தாலும் பலியாடு நீங்கள் தாம்.

ஒரு கம்பெனியில் MCX கணக்கு தொடங்கும் முன் கீழ்காணும் விஷயங்களில் கறாராக இருங்கள்

1. Advanced Brokerage Commission கொடுக்காதீர்கள்
2. கணக்கு தொடங்குவதற்கு 300 முதல் 750 வரை கேட்பார்கள். கொடுக்காதீர்கள். நிறைய கம்பெனிகள் இதை இலவசமாக செய்கிறார்கள்
3. சரியான விளக்கமில்லாமல் Margin Cheque கொடுக்காதீர்கள்
4. 0.03% க்கும் மேல் Brokerage Commission கொடுக்காதீர்கள். பேசினால் குறைப்பார்கள்
5. உங்களிடம் ஆவணங்களை வாங்கி பத்து நாட்களுக்குள் கணக்கு தொடங்கவில்லையென்றால் விளக்கம் கேளுங்கள். பதில் திருப்தியாக இல்லையென்றால் திரும்ப தந்துவிட வற்புறுத்துங்கள்.
6. Payout எனப்படும் பணத்தை மீண்டும் உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும் விசயத்தில் 24 மணி நேரத்திற்கு மேல் தாமதிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருங்கள். (வார இறுதியை தவிர்த்து)

பெரிய கம்பெனிகளிடம் சில வசதிகளும் உண்டு

1. சில கம்பெனிகள் Chart இலவசமாக கொடுப்பார்கள்.
2. Mobile Trading வசதி செய்துகொடுப்பார்கள்
3. PayIn எளிதாக இருக்கும். உங்கள் MCX கணக்குடன் Online Payment Method இணைக்கப்பட்டிருக்கும். ஆகவே அவசரமாக உங்கள் கணக்கில் பணம் செலுத்தி வர்த்தகம் செய்ய முடியும். சிறிய கம்பெனிகளில் நீங்கள் பணம் செலுத்திய பிறகு அவர்களுக்கு போனில் அழைத்து சொல்லவேண்டும்.

சிறிய கம்பெனிகளிடம் உள்ள வசதிகள்

1. Account Opening Charge இருக்காது. Account Opening நடைமுறை மிக எளிதாக இருக்கும். ஒரே நாளில் கூட கணக்கை தொடங்கிவிடலாம்.
2. Brokerage Commission மிக குறைவாக இருக்கும்.
3. Margin Cheque கட்டாயம் கிடையாது. Limit அதிகம் கேட்டீர்கள் என்றால் இதை கேட்பார்கள்.
4. Payout பெரும்பாலும் ஒரே நாளில் செய்துவிடுவார்கள்.
5. Limit நீங்கள் விரும்பிய அளவு கொடுப்பார்கள். Limit அதிகம் எடுக்கும் போது இரண்டு பக்கமும் ரிஸ்க் இருக்கிறது.
6. Support மிக நன்றாக இருக்கும். அவர்களை பொறுத்தவரையில் ஒரு கஸ்டமர் கூட விட்டுச்சென்றுவிடக் கூடாது என்று நினைப்பார்கள்
7. எந்நேரம் கால் செய்தாலும் பொதுவாக லைன் கிடைக்கும்.


Limit என்பது குறைவான முதலீட்டில் அதிக அளவு கொள்முதல் செய்ய முடியும். பொதுவாக பெரிய நிறுவனங்களில் உங்கள் கணக்கில் உள்ள பணத்திற்கு 60% மேல் நஷ்டம் வரும்போது வர்த்தகத்தை அவர்களே முடித்துவைத்து வெளியேற்றிவிடுவார்கள். இதுவே சிறிய நிறுவனங்களில் அவர்களுடன் நல்ல நட்பில் இருந்தால் 80% ஏன் அதற்கும் மேலும் கூட ரிஸ்க் எடுத்து செய்வார்கள்.

கணக்கு தொடங்கியவுடன் நீங்கள் எந்த வங்கியின் காசோலையை கொடுத்தீர்களோ அதே வங்கியில் இருந்து காசோலை மூலமாகவோ அல்லது Net Banking மூலமாக NEFT / RTGS / Interbank Transfer மூலமாக செய்யலாம். IMPS செய்யும் போது Reference Number ஐ தவிர்த்து அனுப்பியவர் பெயர் வருவதில்லை. ஆகவே நிறுவனத்திடம் கேட்டுவிட்டு செய்யலாம்

நாங்கள் குறிப்பிட்ட இந்த விஷயங்கள் புதியவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.

மந்தமான மார்கெட்

நேற்று நாங்கள் சொன்னது போலவே சந்தையில் பெரிய மாற்றம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் நேற்று எந்த நகர்வும் இல்லை. குருடில் 35 புள்ளிகளும் காப்பரில் 1.5 புள்ளிகள் மட்டுமே நகர்ந்தது. இது சராசரியில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே

இன்று குருடாயில் 3170-75இல் தற்போது (1.15PM) ஓடிக்கொண்டிருக்கிறது. இது மாலையில் 3195 ஐ எளிதில் தொடும். 3205 ஐ உடைத்தால் மேலே 3245 ஐத் தொடும். மாலை 3195 ஐத் தொட்டுவிட்டு கீழே இருபது புள்ளிகள் தொட வாய்ப்பு அதிகம். 3155 ஐத் தொட்டால் மீண்டும் மேலே ஏறாது. இது எப்படி என்று கேட்பவர்கள் குருடாயிலில் எந்த செய்தியும் இல்லாத நாட்களில் Fibonacci series படி தான் புள்ளிகள் நகரும்.

நேற்று தங்கத்திலும் எந்த நகர்வுகள் இல்லை. இன்று 30950-90க்கும் நடுவில் ஓடிக்கொண்டிருக்கும் இது பகலில் மேலே ஏறக்கூடும். 31050 ஐ தொடலாம். அதை உடைத்து மேலே சென்றால் நாளையும் மேலே தான் ஏறக்கூடும். position போகலாம். Long-termக்கு பார்த்தால் தங்கம் இறங்கவே செய்யும். செப்டெம்பர் முழுதும் கீழே கொஞ்சம் கொஞ்சமாக விழக்கூடும்

இந்த மந்தநிலை இன்னும் ஒருவாரத்திற்கு தொடரும் என்கிறார்கள்

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

தங்கம் இன்று சற்று உயரும்

இன்று காப்பரில் எந்த புதிய செய்தியும் இல்லாததால் அதன் பழைய செய்திகளின் தொடர்ச்சியாக இன்றும் அது கீழே தான் இறங்க வேண்டும். ஆனால் பெரிய நகர்வு இல்லாமல் 317/316 தொடுவதொடு நின்று சற்று மேலே ஏறலாம்.

குருடாயில் கதையும் அவ்வாறே. ஜப்பான் மற்றும் ஷாங்காய் சந்தையில் உண்டான தளர்வு/நம்பிக்கையின்மை அப்படியே தொடர்கிறது. ஆகவே பகலில் விழவே செய்யும். ஐரோப்பிய சந்தையிலும் பெரிய செய்திகள் இல்லாததால் இன்று 3130 ஐ தொடக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம்

தங்கம் இன்று சற்று உயரும். பகலில் மந்தமாக இருக்கும் இது மாலையில் 70 புள்ளிகள் உயரும் என்று எதிர்பார்க்கிறோம்

இதை ஒட்டியே வெள்ளியும் பகலில் மந்தமாகவும், மாலை ஒரு எழுச்சியுடனும் இருக்கும்.

தங்கமும், வெள்ளியும் செப்டெம்பரில் ஏறும் என்று சொல்கிறார்கள். ஏறுவதைக் காட்டிலும் இறங்கவே அதிக வாய்ப்புண்டு. அடுத்த பத்துநாட்கள் மெதுவாக ஏறினால் அதற்க்கு அடுத்து ஒரு பள்ளத்தை காணும். 

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

இன்றைய கமாடிட்டி சந்தை எப்படி இருக்கும்

நேற்று நாங்கள் குறிப்பிட்ட அனைத்தும் கச்சிதமாக நடந்தது. இதில் பெரிய ரகசியம் எதுவும் இல்லை. உலக வர்த்தக செய்திகளை கவனித்து, புரிந்து நடந்தாலே எளிதில் யாரும் கணிக்க முடியும்

இன்று பங்குசந்தையில் சரிவு காணப்படுகிறது. அது கமாடிட்டி சந்தைக்கு சாதகமாக இருக்கும். இன்று பகலில் குருடாயில், காப்பர், அலுமினியம் மற்ற மெட்டல் எல்லாமே மேலே ஏறக்கூடும்.

தங்கம் மேலேயும் கீழேயும் மாறி மாறி செல்லும். அல்லது எந்த நகர்வும் இல்லாமல் அமைதியாக இருக்கும்

குருடாயில் இன்று மேலேறி 3210 ஐ உடைத்தால் இன்னும் மேலேறி 3240 ஐ நெருங்கும். மாலை கீழே சென்றால் அது 3160 ஐ உடைத்தால் 3130 ஐ தொடலாம்.




எல்லன் அறிக்கை நேற்று தங்கத்திற்கு சாதகமாக இருந்ததால் அதனுடன் நகை செய்ய உதவும் காப்பரும் சிறிது ஏற்றம் கண்டது. இன்று மாலை காப்பர் இறங்கும் என்று சொல்கிறார்கள். 4 மணிக்கு மேல் 310க்கு அருகில் அல்லது அதை தாண்டி இருந்தால் Sell செல்வது லாபத்தை கொடுக்கும்

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

கரையும் தங்கம்

தங்கம் நேற்று நாங்கள் சொன்னபடியே 31100 தொட்டு அதையும் உடைத்து 31046 வரை சென்றது. இன்றும் தங்கம் கீழே தான் இறங்கும். நடுவில் சின்ன ஏற்றம் இருக்கக்கூடும். அதைவைத்து மேலே செல்கிறது என்று முடிவெடுக்க முடியாது


இன்று தங்கம் 30900 ஐயும் உடைத்து 30865 ஐ தொடக் கூடும். ஆகவே Sell போவது நல்லது

தங்கம் இறங்கினால் பொதுவாக குருடாயில் ஏறவேண்டும். நேற்று inventory ஓவர் சப்ளை என்று வந்ததால், அது மேலே ஏறாமல் கீழே இறங்கியது. இன்று எந்த செய்தியும் கிடையாது. ஆகவே கீழே இறங்க வாய்ப்பு குறைவு. தங்கம் இறங்கினால் அதில் இருந்து முதலீட்டை எடுத்து குருடில் போடுவார்கள். அதுவும் இப்பொழுது கொஞ்சம் மேலே இருப்பதால் buy இல் போகவே அதிக வாய்ப்பிருக்கிறது



காப்பர் ஏறுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. இருந்த போதும் குருட்டின் பக்கவிளைவாய் இதுவும் கொஞ்சம் ஏறக்கூடும். ஏறிய பின் பின்னிரவில் இறங்கவே செய்யும். கீழே 306 ஐத் தொட்டால் அது மேலும் குறைந்து 304 ஐ தொடும். மேலே 310 ஐத் தொட்டுவிட்டு இறங்கலாம்.


தங்கத்தின் வரலாறு

இன்று சந்தையின் போக்கு பகலில் மந்தமாகத்தான் இருக்கும் என்பதால் ஒரு மாறுதலுக்காக தங்கத்தின் வரலாறு என்ன என்று பார்ப்போம்.

சுமார் 8 ஆயிரம் வருடம் முன்பே தங்கத்தை கண்டுபிடித்துவிட்டார்கள். பண்டைய எகிப்திய அரசர்கள் தங்களுக்கு மட்டும் தங்கத்தில் ஆன ஆடை ஆபரணங்களை செய்து கொண்டார்கள். அப்போதெல்லாம் மன்னர் குடும்பத்தை விட வேறு யாரும் உபயோகித்திட முடியாது. பொதுமக்கள் புழக்கத்திற்கு அதுவிடப்படவில்லை.

அவர்கள் கல்லறைகளில் தங்கம் வைத்து புதைக்கப்பட்டது. சொர்கத்தில் நுழைய தங்கம் இருந்தால் தான் முடியும் என்ற நம்பிக்கை அப்போது பரவலாக இருந்தது.

அன்றிலிருந்தே தங்கத்தின் மீதான மோகம் மனிதர்களுக்கு இருந்தது. இதன் பின் பல ஆயிரம் வருடங்களுக்கு பிறகு தான் காப்பர் தனியாக பிரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. பிறகு டின் உலோகத்துடன் இணைத்து வெண்கலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்படி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதனுடன் பயணிக்கும் தங்கம் ஒன்றும் மனிதன் உயிர்வாழ அத்தியாவசமான பொருளல்ல. மாறாக தங்கம் மனித இனத்திற்கு கொடுத்த மகிழ்வை விட, துயரங்கள் அதிகம். உலகில் எத்தனை படையெடுப்புகள் தங்கத்திற்காக மட்டுமே நடத்தப்பட்டிருக்கின்றன. அப்போர்களில் இழந்த உயிர்களை விட தங்கம் மேலானதாக இருந்து வந்திருக்கின்றது.

தங்க வேட்டைக்கு பெயர் போன கலிபோர்னியாவில் தங்க வேட்டையின் பெயரில் உண்மையில் நடந்தது மனித வேட்டை தான். தங்க வேட்டை காலங்களில் ஒரு இலட்சம் அமெரிக்க இந்தியர்களை கொன்று குவித்து தங்கத்தை தேடியிருக்கிறார்கள். கலிபோர்னியாவில் 1845 ஆம் ஆண்டு 150,000 மக்களாக இருந்த அமெரிக்க இந்தியர்கள் 1870 ஆண்டில் 30,000 மக்களாக குறைக்கப்பட்டனர். அமெரிக்க இந்தியர்கள் மட்டுமல்ல தங்க வேட்டைக்கு சென்ற வெள்ளைக்காரர்களும் கூட கடும் அழிவை சந்தித்திருக்கின்றனர். 1849 முதல் 1854 வரை ஐந்தாண்டுகளில் தங்க வேட்டையில் ஈடுபட்டவர்களின் இழப்புகளை ஹிண்டன் ஹெல்பர் என்பவர் கீழ்கண்டவாறு பட்டியலிட்டிருக்கின்றார்.

கொலை செய்யப்பட்டவர்கள் : 4200

தற்கொலை செய்து கொண்டவர்கள்: 1400

மன நோயாளியாகியவர்கள்: 1700

நீர் மற்றும் நில வழி பயணத்தில் இறந்தவர்கள் : 2200

அமெரிக்க இந்தியர்களால் கொல்லப்பட்டவர்கள்: 1600

சுரங்கத்தில் உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையால் இறந்தவர்கள்: 5300

மொத்தம் 16400

கலிபோர்னியாவில் கிடைத்த தங்கம், இதை விட அதிகமான எண்ணிக்கையிலான மனிதர்களையா வாழ வைத்திருக்கின்ற போகின்றது? ஒரு இலட்சம் மக்களின் உயிரைப் பறித்து எத்தனை கோடி மக்களுக்கு மகிழ்வை கொடுத்தாலும் எப்படி உயர்வான பொருளாக இருக்க முடியும்?

இருப்பினும் இன்றும் தங்கம் தான் உலகை ஆள்கின்றது. மனிதனின் உடைமையாக இருக்க வேண்டிய தங்கம் இன்று மனிதனை உடைமையாகக் கொண்டிருக்கின்றது.




தங்கத்திற்கு முன்னும் பின்னும் கண்டுபிடிக்கப்பட்ட எத்தனையோ பொருள்கள் மதிப்பிழந்துவிட்டன. 1820 ஆண்டு அலுமினியத்தை மண்ணிலிருந்து அல்ப்ரெட் வில்ம் என்ற ஜெர்மன் வேதியாளர் பிரித்து காட்டிய பொழுது உலகமே அலுமினியத்தை கொண்டாடியது. பிரெஞ்ச் அரசு அரச நகைகளுடன் அலுமினிய கட்டிகளை அடுக்கி காட்சிப்படுத்தியது. பிரெஞ்ச் பேரரசர் மூன்றாம் நெப்போலியன் மிக மதிப்பு மிக்க விருந்தினருக்கு அலுமினிய கரண்டிகளில் உணவு பரிமாறினார் (மற்றவர்களுக்கு தங்க கரண்டிகள் பயன்படுத்தப்பட்டன). அமெரிக்கா தனது அலுமினிய செல்வாக்கைக் காட்ட வாசிங்டன் நினைவு சின்னத்தின் உச்சியில் ஆறு பவுண்ட் எடை உள்ள அலுமினிய பிரமிடை நிறுவியது. ஆனால் இன்று அலுமினியத்தின் நிலை என்ன? அலுமினியத்தை தங்கத்தின் அருகில் வைப்போமா? பலரும் பிராணிகளுக்கு கூட அலுமினிய பாத்திரத்தில் உணவு வைப்பதில்லை. உச்சிக்கு சென்ற அலுமினியம் ஒரு நூற்றாண்டுகளுக்குள்ளாகவே வீழ்ச்சி அடைந்துவிட்டது. ஆனால் தங்கம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மனிதனை ஆண்டு வருகின்றது.

Image result for aluminium history


அப்படி என்ன தான் இருக்கின்றது இந்த தங்கத்தில்? இதை நாமே உற்பத்தி செய்துவிட முடியாதா என்று பல ஆராய்ச்சியாளர்களும் முயன்று பார்த்துவிட்டனர். 1924 ஆம் ஆண்டே ஒரு ஜப்பானிய வேதியாளர் பாதரசம் அணுவை மாற்றி தங்க அணுவை உருவாக்கினார். அதன் பின்னர் பல ஆராய்ச்சியாளர்களும் பாதரசத்தில் இருந்து தங்கத்தை உருவாக்கும் பல வழிகளை கண்டறிந்துவிட்டனர். 1980 ஆம் ஆண்டு கிலென் ஸீபோர்க் என்பவர் பிஸ்மத் உலோகத்தில் இருந்து தங்கத்தை உருவாக்கி காட்டினார். இருப்பினும் இம்முறைகளின் மூலம் ஒரு கிராம் தங்கத்தை உருவாக்க ஆகும் செலவிற்கு ஒரு பவுன் தங்கத்தையே வாங்கிவிடலாம். சென்ற ஆண்டு நச்சு வேதிய திரவத்தில் வாழும் பாக்டீரியா நுண்ணியிர்கள் தங்கத்தை உருவாக்குவதை கண்டறிந்து இருக்கின்றனர். ஆராய்ச்சியாளர்களை விட குறைந்த செலவில் பாக்டீரியாக்களால் தங்கத்தை உருவாக்க முடியுமா என்ற ஆராய்ச்சி இப்பொழுது முடுக்கிவிடப் பட்டிருக்கின்றது. பாக்டீரியா தங்கம் நகைக்கடைக்கு வரும் பொழுது தான் நம் குடும்பத்தினர் நம்புவார்கள்.

இப்படி அனைத்து புதிர்களையும் உள்ளடக்கிய தங்கத்தை எப்படி தான் உருவாக்குகிறார்கள் என்று பார்க்கலாமா?

ஆண்டுதோறும் உலகத்திற்கு தேவையான தங்கத்தில் பாதி தென்னாப்பிரிக்கச் சுரங்கங்களில் இருந்து தான் உருவாகின்றது. அனைத்தும் வெறும் கருப்பு களிமண்ணிலிருந்துதான் தயாராகிறது என்றால் வியப்பாக இருக்கும். மண்ணில் பளபளவென்று தெரிந்தால் அது தங்கம் என்று சொல்லிவிட முடியாது.

10,000 அடிக்குக் கீழே கிடைக்கும் உலோக மண்ணை மழமழவென்று பொடிசெய்து நீரிலும் சயனைடிலும் கழுவிய பின்தான் மஞ்சள் பொன் துளிகள் கண்ணுக்குத் தெரியும். குழகுழ என கருப்பு களிமண் கலந்து இருக்கும்.

Image result for south african gold mine


இந்தக் கருப்பு தங்கத்தை துத்தநாகப் பொடி சேர்த்து உருக்கினால் ‘புல்லியன்’ என்னும் பளபளப்பான மஞ்சள் கட்டித் தங்கம் (பார்) கிடைக்கிறது. இப்படி ஒவ்வொரு கட்டியும் டிராய் எடைப்படி 1,000 அவுண்ஸ் இருக்கும். சுரங்க வேலை நடக்கும் போது நாள் ஒன்றுக்கு இப்படி 45 தங்கக் கட்டிகள் தென்னாப்பிரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. சுரங்கங்களிலிருந்து இந்தத் தங்கக் கட்டிகள் மோட்டார், புகைவண்டி, வானூர்தி மூலமாக ஜெர்மிஸ்டன் என்ற நகருக்குச் செல்லும். இந்த நகரம் ஜோஹென்ஸ்பர்க்குக் கிழக்கில் 12 மைல் தொலைவில் உள்ளது. தங்கத்தை சுத்தம் செய்வதில் உலகத்திலேயே மிகப்பெரிய தொழிற்சாலை ராண்டு ரிஃபைனரிஜெர்மிஸ்டனில் இருக்கிறது. அங்கே தங்கக் கட்டிகளை மறுபடியும் நிறுத்திச் சரியாக இருக்கின்றதா என்று பார்வையிடுவார்கள். பிறகு கிராஃபைட் என்னும் பென்சில் கரியாலான கொப்பறைகளை உருவாக்குவார்கள். இந்தக் கொப்பறைகளை கொதித்துக் கொண்டிருக்கும் தணலில் கழுத்து மட்டத்திற்கு புதைத்திருப்பார்கள். இப்படி உருக்கியதும் அந்தத் தங்க குழம்பை நன்றாக கலக்குவார்கள். சிறு கிண்ணங்கள் போல பல இடங்களில் பொருத்தி, மாதிரி பார்ப்பதற்கு என்று அமைந்த ஒரு கப்பியை உருகும் தங்கத்தில் தோய்த்து எடுப்பார்கள்.

இதிலிருந்து பிறகு அந்தத் தங்கக் கட்டிகளில் தங்கமும் வெள்ளியும் எவ்வளவு என்று தீர்மானிப்பார்கள். இப்படி சுரங்கத்தில் இருந்து கிடைத்த தங்கக் கட்டி ஒவ்வொன்றிலும் 874 அவுன்ஸ் தங்கமும், 90 அவுன்ஸ் வெள்ளியும் மீதம் 36 அவுன்ஸ் மற்ற உலோகங்களான துத்தநாகம், இரும்பு, செம்பு, ஈயம் முதலியவை கலந்திருக்கும்.

மாதிரி பார்த்தப் பிறகு இந்த தங்கக் கட்டிகளை சுத்தம் செய்வதற்காக 400 அவுன்ஸ் கொண்ட மொத்தைகளாக்குவார்கள். அந்த மொத்தைகளைக் களிமண்ணால் செய்த கொப்பறையில் போட்டு உருக்குவார்கள். பிறகு போரக்ஸ் உப்பை அதில் சேர்த்து குளோரின் ஆவியை அந்த தங்கத்திரவத்தில் செலுத்துவார்கள். போரக்ஸ் மட்ட ரகமான உலோகப் பொருள் கலந்த ஆக்ஸைடுகளோடு சேர, குளோரின் ஆவி, மட்டரக உலோகங்கள்,வெள்ளி இவற்றோடு கலந்து அந்த உலோகங்கள் அடங்கிய குளோரைடுகளாக மாறி மேலே மிதக்கும். அப்போது இவற்றை நீக்கி விடலாம். இப்படிச் சுத்தமாக்கிய தங்கத்தை வேறொரு அடுப்பில் வைத்து காய்ச்சி நன்றாகக் கலக்கிய பின் மாதிரி எடுத்து சோதிப்பார்கள்.

பிறகு 400 அவுன்ஸ் எடை கொண்ட அசல் தங்க கட்டியாக்கி உலக தங்கமார்க்கெட்டுக்கு அனுப்புவார்கள். உலோகம் குளோரைடுகளிலிருந்து வெள்ளி கிடைக்கின்றது. அதை 1000 அவுன்ஸ் கட்டிகளாக்குகிறார்கள். தென்னாப்பிரிக்கத் தங்கம் பெரும்பாலும் லண்டன் தங்க மார்க்கெட்டில் விற்பனை ஆகிவருகிறது. புகைவண்டி மற்றும் கப்பல் வழியாக அனுப்புவது வழக்கம். சுத்தமாக்கிய தங்க கடடிகளை மரப்பெட்டிகளில் மூடிவைப்பார்கள்.

லண்டனில் உள்ள திராக் மார்ட்டன் தெருவில் உள்ள இங்கிலாந்து வங்கியில் கொண்டு போய் சேர்ப்பார்கள். அங்கிருந்துதான் உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். இங்கிலாந்து வங்கி மூலம்தான் இந்த தங்கத்தை விற்க ஏற்பாடு செய்கிறார்கள். தென்னாப்பிரிக்கா ரிசர்வ் வங்கியின் ஏஜென்ட்டாக இங்கிலாந்து வங்கி செயல்பட்டு வருகிறது. லண்டன் மார்க்கெட் விலையையே ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

ராண்டு ரிபைனரி என்னும் தங்கம் சுத்தப்படுத்தும் ஆலையில் மின்சாரத்தின் மூலம் காற்றிலிருந்து தங்கம் எடுக்கும் முறையை கடைபிடித்து ஆலையில் மின்சாரத்தின் மூலம் காற்றிலிருந்து தங்கம் எடுக்கும் முறையை கடைபிடித்து வருகின்றனர். இதனால் அடுப்பில் தங்கம் உருக்கும் போது உஷ்ண ஆவி கிளம்பி தங்கம், வெள்ளி தூள்கள் வெளிக்கிளம்பி காற்றோடு போய் விடாமல் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பவுன் தங்கத்தை சேமிக்க முடிகின்றது. இது இல்லாமல் இன்னும் பல வழிகளில் தங்கம் வீண்போகாமல் பார்த்துக் கொள்கின்றார்கள்.

Information gathered from
http://www.makin-metals.com/about/history-of-metals-infographic/
http://siragu.com/?p=14574

புதன், 24 ஆகஸ்ட், 2016

இன்று சந்தை எப்படி இருக்கும்

காப்பர்ரின் பெரிய உற்பத்தி நாடான சீனா உற்பத்தியை அதிகரித்து இருப்பதால் அது விழுந்து கொண்டே செல்கிறது. இது அதிக நாட்களுக்கு நீடிக்காது. இருந்தாலும் நேற்றே நான் எழுதியது போல தொலைத்தொடர்பு இணைய பயன்பாட்டிற்கு கண்ணாடி இழை கம்பிகள் பயன்படுத்தப் படுவதால் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இறக்குமதியை குறைத்துவிட்டார்கள்.



நீண்ட கால முதலீடு செல்பவர்கள் Sell போகலாம். இரண்டொரு வாரங்களில் இது 290 ஐத் தொடும் என்று சொல்கிறார்கள்.

இன்று உடனே கீழே இறங்காது. பகலில் ஒரு ஏற்றம் ஏறி 316/ 318 ஐத் தொடக்கூடும். ஏனென்றால் Sell சென்ற பெரிய முதலீட்டாளர்கள் லாபத்தை அறுவடை செய்ய Buy செல்வார்கள். அப்போது கொஞ்சம் மேலே ஏறும்

தங்கம் நாங்கள் கணித்ததை போல 31400 ஐ தொட்டுவிட்டு இறங்கிக் கொண்டே செல்கிறது. செப்டெம்பர் மாதம் இன்னும் ஆயிரம், இரண்டாயிரம் புள்ளிகள் இறங்கும் என்று சொல்கிறார்கள். பொதுவாக செப்டெம்பர் என்றாலே தங்கத்தின் விலை குறையும். கடந்த ஆறு வருடங்களாக இது தான் நிதர்சனம்

இன்று மேலே ஏறினால் 31450 ஐயும், கீழே இறங்கினால் 31250 ஐயும் தொடக்கூடும். பகலில் இது கீழே இறங்கி மாலை மேலே ஏறும் என்று எதிர்பார்க்கிறோம்.

குருடாயில் இன்று கீழே இறங்குகிறது. மேலும் இறங்கும். மாலை மூன்று மீட்டிங் இருக்கிறது. HPIM/m , Existing Home sales, Crude Oil Inventories at 8pm . மேலே கீழே மாறி மாறி செல்லும். கீழே 3100 தொடலாம். அதன் அருகில் Buy செல்லுங்க, மேலே 3270 ஐ தொடக்கூடும் அப்போது Sell செல்லுங்கள்.




செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

குருடாயில், தங்கம், காப்பர் இன்றைய நிலவரம்

குருடாயில் நேற்று சொன்னது போல மேலும் கீழும் சென்று மாலை ஒரே இறக்கம். இன்றும் குருடாயில் இறங்கவே கூடும். Sharp slip இன்று இருக்காது. நடுவில் கொஞ்சம் ஏறி இறங்கும்.

மாலை 3120 ஐ தொடக்கூடும். பின்னிரவில் 3080 தொடலாம். இன்று 3190 இல் Sell போகலாம். Stop loss 3205 வைத்துக்கொள்ளுங்கள்.

சமிபகாலமாக அமெரிக்க பங்கு சந்தையில் உண்டான சரிவின் காரணமாக தங்கம் மேலே செல்கிறது. இன்றும் மேலே சென்று 31500 ஐ தொடும் என்று எதிர்பார்க்கிறோம்.

காப்பரில் பெரிய செய்தி எதுவும் இல்லை. சீனா தனது பெரிய ப்ராஜெக்ட்களை நிறுத்தி வைத்துள்ளதால் உலோகத்திற்கான தேவை  குறைந்துள்ளது. ஹுனானில் உள்ள சுரங்கத்தின் உற்பத்தியை குறைத்தும் விலை ஏறியபாடில்லை. பெரிதாக இறங்கவும் வாய்ப்பில்லை. இந்த மந்தநிலை செப்டெம்பர் முதல்வாரம் வரை தொடரும் என்று சொல்கிறார்கள். அது வரை 315க்கும் 325க்கும் நடுவில் தான் ஓடும். இன்று 320 ஐத் தொட்டுவிட்டு கீழே இறங்கக்கூடும். புதிய செய்திகள் வந்தால் இதில் மாற்றம் இருக்கலாம்.

காப்பர் இப்போதெல்லாம் தொலைத்தொடர்பு துறையில் மிகவும் குறைவாக பயன்படுத்தப் படுகிறது காரணம் Fiber எனப்படும் கண்ணாடி இழை தொழில்நுட்பம் பரவலாக்கப்பட்டு வருகிறது. மேலும் நாணயங்கள் உற்பத்தியை பல நாடுகள் குறைத்துவிட்டன.


திங்கள், 22 ஆகஸ்ட், 2016

குருடாயில் 50$ ஐ தொடுமா..

குருடாயில் 48.3$ இல் வர்த்தகம் ஆகிக் கொண்டிருக்கிறது. இது கீழே இறங்குவதற்கு எந்த செய்தியும் இல்லை. இருந்தாலும் அப்படி ஒரு செய்தி வந்துவிடுமோ என்ற அச்சம் எல்லா இடத்திலும் இருக்கிறது. காரணம் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜூன் 8ஆம் தேதி வரை ஏறிக் கொண்டிருந்த குருடாயில் விழ ஆரம்பித்தது தான். இந்த மாதம் இரண்டாம் தேதி வரை விழுந்து கொண்டே தான் இருந்தது. இன்னும் விழுமோ என்று எண்ணிக் கொண்டிருந்த போது ஏற ஆரம்பித்து இப்போது மீண்டும் 48க்கும் 50க்கும் நடுவில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது


அது ஒரு பிரேக்கிங் புள்ளியாக இருக்கிறது. 51$ தாண்டினால் மேலே ஏறிக்கொண்டே தான் செல்லும். 45$ ஐ உடைத்தால் கீழே இறங்கிகொண்டே தான் செல்லும். இதற்கு நடுவில் ட்ரேட் பண்ண பெரிய முதலைகள் கொஞ்சமும் தயாராகவே இல்லை. ஆக மேலும் கீழுமாக நன்றாக உழட்டிக் கொண்டே இருக்கிறார்கள்

இன்று 3290 க்கு மேல் Sell போகலாம். 3260கீழ் Buy போகலாம். இந்த இடைவெளியில் கண்டிப்பாக 30 புள்ளிகள் கிடைக்கும். இதற்கு அப்பால் எது சென்றாலும் ரிஸ்க் தான்


வியாழன், 18 ஆகஸ்ட், 2016

சந்தையின் போக்கு இன்று எப்படி

இன்று காலையில் மேலே செல்கிறது குருடாயிலும், பேஸ் மெட்டல்களும் காரணம் நேற்றைய போக்கு மேலே சென்றது ஒரு காரணம். இன்னொரு காரணம் இன்றைக்கு எதுவும் முக்கியமான செய்திகள் இதுவரை இல்லை

மாலை நெருங்க கதை மாறும் என்று நினைக்கிறோம். குருடாயில் கீழே இறங்கி சென்று 3100 தொட்டுவிட்டு மேலே ஏறலாம். மேலே சென்றால் 3190 வரை செல்லக்கூடும்.

Updated Levels for Crude
3162.00 S13192.00 S23232.00 S33122.00 R13092.00 R23052.00 R3

அதை ஒட்டி காப்பரும் 324 ஐ எளிதில் தொடும். மீண்டும் கிழே இறங்கலாம். மாலை நேரம் ஒரு ஆட்டம் ஆடிவிட்டு தான் மேலே செல்லும்

கவனமாக ட்ரேடிங் செய்ய வேண்டிய நாள் 

புதன், 17 ஆகஸ்ட், 2016

கம்மாடிட்டி என்ன கம்பசூத்திரமா புரியாமல் போக - பாகம் 1



எங்களது வாடிக்கையாளர்களில் இருவகையினர் உண்டு. ஒன்று கம்மாடிட்டி சந்தையை மிக அதிகமாக அறிந்தவர்கள், வெகு நுணுக்கமாக பேசுபவர்கள், அவர்களின் கேள்விகள் மிகவும் அதீதமாக இருக்கும்.

இரண்டாம் வகையினர் எதுவும் அறியாதவர்கள். நாங்கள் எளிமையாக சொல்லிக்கொடுப்பதை புரிந்துகொள்வார்கள். நாங்கள் என்ன சொல்கிறோமோ அதைத்தாண்டி ட்ரேடிங்கில் எதுவும் செய்யமாட்டார்கள்

இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்றால் இரண்டாம் வகையினர் தான். காரணம் மிக எளிது. சொன்னதை தாண்டி அவர்கள் சந்தையில் ஈடுபடுவதில்லை. ஆகவே சந்தை அவர்களின் முடிவை மாற்றப்போவதும் இல்லை.

இந்த முதல்வகையினரை சந்தையில் நிறைய தொழில் நுணுக்கங்கள், வரைபடங்கள், Levels கொடுக்கும் Excel Sheetகள் என்று மிக அதிகமாக யோசிக்கும் போதே சந்தை மிக எளிதில் ஏமாற்றிவிடும். மிகச்சிலர் விதிவிலக்காக இருப்பார்கள். காரணம் அவர்களின் நிதான குணமும், அளவான எதிர்பார்ப்பும், குறைவான நேரம் செலவிடலும் வெற்றியை கொடுத்திருக்கும்

சந்தையில் நேரம் அதிகம் செலவிட செலவிட நஷ்டம் அதிகமாகத்தான் இருக்கும். ஒரு நண்பர் எங்களை அவருக்காக ட்ரேடிங் பண்ணித்தர கேட்டார். வேறுவழியில்லை என்பதால் அவருக்காக நாங்கள் செய்தோம். முதலில் 40 ஆயிரம் வரை லாபம் எடுத்துக் கொடுத்தோம். அது தந்த நம்பிக்கையில் எங்களையறியாமல் எங்கள் விதிகளை நாங்களே மீற மீண்டும் நட்டத்தில் விழ ஆரம்பிக்க, அதை சரிசெய்ய முயற்சிக்கும் போது இன்னும் தவறிழைக்க மீண்டும் நட்டம். ரெம்பவும் நட்டம் வரும்முன்பு நிறுத்திக்கொண்டோம். இது தந்த பாடம் மிகவும் வலிமையானது. எத்தனை அறிவுடன் அணுகினாலும் சந்தையை தொடர்ந்து கவனித்துவரும்போது அது நம் முடிவுகளை மாற்றிவிடும் என்பதே அந்த பாடம்


கம்மாடிட்டி சந்தை ஒரு பெரிய வலைபின்னல். சர்வதேச சந்தைகளுடன் நேரடி தொடர்புகொண்டது. பலவிதமான காரணிகள் இருக்கிறது சந்தையின் போக்கை நிர்ணயிக்க.


இதை சரியாக அணுகி, அளவான லாபத்தை எதிர்நோக்கும் வரை உங்களுக்கு நிதானமான லாபத்தை வழங்கிகொண்டே வரும். அது என்ன அளவு? மாதம் குறைந்தது பதினைந்துசதவீத லாபம், அதிகம் போனால் 25% லாபம் எதிர்நோக்கும் வரை பிரச்சனை இல்லை.


எங்களது மொபைல் ஆப் ஒரு லட்சம் முதலீடு போட்டவருக்கு அதிகபட்சம் 60 ஆயிரம் ஒரு மாதத்திற்கு சம்பாதித்து கொடுக்கிறது. நம்புவதற்கு கடினம் தான்.




ஆனால் ஆதாரத்துடன் விளக்குகிறோம்.

http://mcxtracker.com/past-performance/ இந்த லிங்க்கை கிளிக் செய்து பாருங்கள்


ஜூலை மாதம் நாங்கள் கொடுத்த Calls மொத்தம் 78

அதில் Targetஐ தொட்டு Profit கொடுத்தவை மட்டும் 57

Stoploss ஐ தொட்டு Loss கொடுத்தவை மட்டும் 18

இரண்டையும் தொடாமல் வெளியில் வந்தவை 3

முதல் Targetஐ மட்டும் தொட்டவகையில் கிடைத்த Profit : 66500


இது துல்லியமான கணக்கு. சந்தையில் இது அப்படியே கிடைக்க கொஞ்சம் சாத்தியம் குறைவு. நாங்கள் சொல்லும் விலையை நீங்கள் நிர்ணயிக்கும் போது, சந்தையில் கொஞ்சம் மாற்றம் நிகழ்ந்திருக்கும். நெட்வொர்க் பிரச்சனையினால் உங்களுக்கு எங்கள் Calls தாமதமாக சென்றிருக்கும். அது போக Brokerage Commission + 8 different Tax இதெல்லாம் கழித்தது போக கிடைப்பது உங்கள் கணக்கில் சேரும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தான் 25% லாபம் நிச்சயம் என்று கூறினோம்


நாங்கள் கொடுக்கும் Calls எல்லாவற்றையும் Trade செய்ய உங்களிடம் கணிசமான முதலீடு வேண்டும். அப்போது தான் நல்ல லாபம் அடையமுடியும். குறைந்தது ஒரு லட்சம் வைத்துக்கொண்டு செய்வது பாதுகாப்பானது. இது முக்கியமான விதி


கம்ப்யூட்டரில் நாளெல்லாம் சந்தையை பார்த்துக்கொண்டே இருக்க கூடாது. அது உங்கள் முடிவை மாற்றிவிடும். கொடுத்த Calls ஐ அப்படியே Brokerage Companyக்கு phone பண்ணி சொல்லி order place செய்வது நல்லது. நீங்களே கம்ப்யூட்டர் Trading Software இல் போடுவதும் ஓகே. ஆனால் அதை கவனித்துக்கொண்டே இருக்க கூடாது

ஒளிவுமறைவு இல்லாமல் இன்னும் எழுதுகிறோம். தொடரும்

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

குருடாயிலின் புதிய எழுச்சி எத்தனை நாள்

குருடாயில் நேற்று கணித்ததை போல பகலில் ஒரு ஏற்றம் இருந்து மாலையில் கீழே விழுந்தது. ஆனால் நாம் எதிர்பார்த்த புள்ளியை தொடாமால் மீண்டும் ஒரு எழுச்சியை கண்டது. கடந்த மூன்று வாரத்தில் இதுவே அதிகம்.

இது எத்தனை நாள் தொடரும் என்றால் இன்னும் கொஞ்சநாள் தொடரலாம். ஐம்பது டாலருக்கு மேல் போக விடமாட்டார்கள். அமெரிக்காவின் தலையீடு இருக்கும். OPEC நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து உற்பத்தியை குறைக்காமல் பார்த்துக் கொள்வார்கள். ஏனென்றால் முன்பும் இது தான் நடந்தது


இன்று குருடில் நேற்று இருந்த எழுச்சி இருக்காது. ஆனால் பகலில் முப்பது, முப்பத்தைந்து புள்ளிகள் ஏற்றலாம். மாலை இறக்கமும் ஏற்றமும் மாறி மாறி இருக்கும். இறுதியில் 40 புள்ளிகள் ஏற்றி முடிப்பார்கள். இதற்க்கு காரணம் US Job Opening இன்டெக்ஸ் புள்ளிகளில் மாற்றம் இருந்தால் அது குருடாயில் வர்த்தகத்தில் எதிரொலிக்கும் 

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

கம்மாடிட்டி இன்றையநாள் இனிய நாள் தான்

இன்று குருடாயில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். நேற்று நமக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை என்பதால் ஆசிய சந்தையில் ஒரு மந்தநிலை  இருந்திருக்கும். நேற்று மாலை அமெரிக்க சந்தையில் ஒரு ஏற்றம் இருந்ததற்கு காரணம் ரஷ்யா அரசு சவூதி மற்றும் இதர வளைகுடா நாடுகளுடன் ஆயில் உற்பத்தியை குறைக்க முயற்சி எடுத்துவருவதாக  ஒரு செய்தி வந்தது.

இன்று வளைகுடா நாடுகளின் பிரதிநிதி அது பேச்சுவார்த்தையில் தான் இருக்கிறது, தேவை பட்டால் உற்பத்தியை குறைப்போம் என்று சொல்லியிருக்கிறார்.



ஆக எப்படி பார்த்தாலும் ஒரு இறக்கம் இருக்கிறது. இப்பொழுது 3044க்கு குருடாயில் ஓடிக்கொண்டிருக்கிறது. இது இன்று மாலை நெருங்கும்போது 3000, 2980 ஐ தொடக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம்.

நடுவில் எதுவும் செய்தி ஐரோப்பிய சந்தையில் இருந்து வந்தால் மேலே ஏறலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாக தென்படுகிறது

தங்கம் Sideway Trend இல் ஓடிக்கொண்டிருக்கிறது. கொஞ்ச நாளாக டாலர் அடிவாங்கி கொண்டே இருப்பதும், பங்கு சந்தையில் இறக்கம் இருப்பதும் தான் இந்த ஏற்றத்திற்கு காரணம். இது நியாயமாக விழ வேண்டியிருக்கிறது. Buy போட்டால் குறைவான புள்ளிகளுக்கும், Sell போனால் அதிகமான புள்ளிகளும் செல்லலாம்

காப்பரை பொறுத்தவரையில் குருடாயில் என்ன திசையில் செல்கிறதோ அதே திசையில் தான் இன்று பயணம் செய்யும்

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

உப்பு தின்னா தண்ணி குடிச்சு தானே ஆகணும்

உப்பு தின்னா தண்ணி குடிச்சு தானே ஆகணும் என்று ஒரு பழமொழி இருக்கும் இல்லையா.. அது கம்மாடிட்டி சந்தைக்கும் பொருந்தும். இரண்டு நாள் ஏறிக்கொண்டே இருந்தால் மூன்றாவது நாளும் ஏறும் என்று எதிர்பார்க்கமுடியாது, அதுவும் வாரக்கடைசியில்

ஆக இன்று 2790 இல் ஓடிக்கொண்டிருக்கும் குருடாயில் இன்று மாலை கீழே விழுகும் என்று எதிர்பார்க்கிறோம். 2740 வரை இறங்க வாய்ப்புண்டு ஒன்பது மணிக்கு மேல் மீண்டும் எழுச்சி கொள்ளும் என்று கணிக்கிறோம்

தங்கம் மேலே ஏறிக்கொண்டிருந்தது இப்போது முதிர்ச்சி புள்ளியை ( Saturation Point ) தொட்டிருக்கிறது. இனிமேல் அது கொஞ்ச நாளைக்கு 150 புள்ளிகள் மேலேயும் கீழேயும் ஓடும். இரண்டு வாரங்களுக்கு பிறகு விழ ஆரம்பித்தால் இரண்டாயிரம் புள்ளிகள் வரை விழக்கூடும்

கடந்த ஐந்து வருடங்களாக இது தான் கதை. காரணம் மிக எளிது. பெரிய முதலீட்டாளர்கள் கம்மாடிட்டி முதலீட்டை எடுத்து பங்குசந்தையில் கொஞ்சநாள் விட்டு லாபம் பார்ப்பார்கள். அக்டோபர் மத்தியில் இருந்து மீண்டும் கம்மாடிட்டி சின்ன எழுச்சி கொள்ளும்.

Positional எடுக்கும் வல்லமை கொண்ட முதலீட்டாளர்கள் தங்கத்தில் Long-term முதலீடு செய்யலாம்

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

இன்னும் குறையுமா குருடாயில்

எல்லோரும் எங்களிடம் கேட்பது இதைதான் இன்னும் குறையுமா குருடாயில்

நாங்கள் சொல்வது " ஆம், இன்னும் குறையவே வாய்ப்புண்டு, 35$ டாலரையும் உடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் குருடாயில் உற்பத்தியை எள்ளளவும் குறைக்கவில்லை. உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறார்கள். ஆக ஒரு முடிவெடுத்துவிட்டார்கள் என்று தான் பொருள்"

நடுநடுவில் மேலே ஏற்றி கீழே சாய்ப்பார்கள். ஆகவே Positional போவது மிக நல்லது. அல்லாவிடில் ஓபன் விலையில் இருந்து முப்பந்தைந்து ரூபாய் மேலே ஏறியவுடன் Sell செய்வது உத்தமம். மேலே வருமா என்றால் கண்டிப்பாக வரும்.

இந்தவாரம் குருடாயில் விழுகும் வா..........ரம்

காப்பரை Intraday இல் நம்பாதீர்கள். குருடுக்கு எதிர்திசையில் போவது போல போக்கு காட்டிவிட்டு குருடு செல்லும் திசையிலேயே செல்லும்

தங்கம் நல்லா ஏற்றிவைத்துவிட்டார்கள். நாங்கள் ஏற்கனவே சொன்னதுபோல இனி கொஞ்சம் கொஞ்சமாக கீழே விழும்

வியாழன், 28 ஜூலை, 2016

புயலுக்கு பின் அமைதி



நேற்று அடித்த புயலில் எல்லா கமாடிட்டியும் கீழே விழுந்தது. விழுந்தா உடனே எழுந்திருக்க இது குதிரையும் இல்லை, ரஜினியும் இல்லை.

பாதுகாப்பான ட்ரேடிங்கிற்கு இது நேரம் இல்லை. மீறி போனவங்களை எல்லாம் நல்லா வச்சு செய்கிறது

Crude Oil Movement 2810க்கும் 2045க்கும் வெறும் 35 புள்ளிகள் மட்டுமே இருக்கிறது

அதே போல ஜின்க் 146.10க்கும் 146.60க்கும் நடுவில் தான் ஓடுகிறது

காப்பர் 329 விட்டு நகரவே இல்லை. இப்படி இருந்தா எப்படி ட்ரேடிங் பண்ணுவது என்று எங்களது வாடிக்கையாளர்கள், ஆலோசகர்கள் புலம்புகிறார்கள்


இது இப்படிதான் இருக்கும், இன்னும் கீழே தான் போகும் நடுநடுவில் மேலேறி பயமுறுத்தும் என்கிறார்கள்


Stop Loss போட்டாலும் அடித்துவிடும், போடாவிட்டாலும் ஒரு பெரிய இறக்கமோ, ஏற்றமோ நடந்து கடுப்படிக்கும்.


எடுத்த கொஞ்ச லாபத்தையும் சுருட்டிவிடும் காலம் இது. மிக மிக கவனம். இன்னும் ஒரு வாரத்திற்கு சந்தை இப்படிதான் இருக்கும் ஆகவே Long Position இல் விற்று வாங்கலாம். அது கூட இன்று ஆபத்து தான். நாளை காலை மேலே ஏறும்போது Sell போவது நல்லது

புதன், 27 ஜூலை, 2016

மார்க்கெட் தூங்கும் போது தொந்தரவு பண்ணாதீங்க

மார்கெட் தூங்கி கொண்டிருக்கிறது. கடந்த ஒருவாரமாக இதுதான் நிலை. கடந்த இரண்டு நாட்களாக ஆழ்ந்த தூக்கம் என்று தான் சொல்லவேண்டும்

ஆசிய பங்கு சந்தையில் ஏற்றம் இருப்பதும், ஆயில் வர்த்தகத்தில் எந்தவித புதிய ஒப்பந்தங்களும் போடப்படாத நிலை இருப்பதும், அமெரிக்க தேர்தல் அருகில் வந்துகொண்டிருப்பதும் என பல காரணங்கள் உலக கமாடிட்டி சந்தையில் அசைவே இல்லாமல் இருப்பதற்கு.

இந்த மாதிரி சமயங்களில் மார்க்கெட்டை தொந்தரவே பண்ணக்கூடாது. தொந்தரவு பண்ணினால் நஷ்டம் மட்டுமே பரிசாக கிடைக்கும். இது உறுதி

சீன சந்தையும், இந்திய சந்தையும் இணைந்து Base Metalஇல் மட்டும் கொஞ்சம் ஆட செய்கிறது. அதிலும் Zinc மற்றும் Lead இல் மட்டும் இந்த ஆட்டம். காப்பர் போனாபோவுதுன்னு  மூன்று புள்ளிகள் ஏற இறங்க இருக்கிறது.

எமக்கு தெரிந்து எந்த Brokerage / Advisory கம்பெனி கொடுத்த காலும் பெரிய வெற்றி பெறவில்லை இந்த ஒரு வாரத்தில்

மாறாக விளைபொருள் சந்தையில் சொல்லிக்கொள்ளும் படி நல்ல நகர்வு  இருக்கிறது .ஆக NCDEX சந்தை வர்த்தகம் பரவாயில்லை. நன்றாக இருக்கிறது

MCX Traders இந்த வாரம் லீவு விட்டுவிடுங்கள். உங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு.  

திங்கள், 25 ஜூலை, 2016

இன்று ரிஸ்க் இருக்கு. பார்த்து செல்லுங்கள்

போன வெள்ளிக்கிழமை மிகப் பெரிய சறுக்கல்கள் இருந்ததால் பெரிதாக செய்தி எதுவும் போடவில்லை

இன்றும் அப்படியே தான் தொடர்கிறது. குருடாயில், காப்பர் இரண்டிலும்  சிறிது ஏற்றம் இருக்கும். குருட் 3040 வரை செல்லும், காப்பர் 338 ஐ  தொடும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனாலும் இதை உறுதியாக கூறமுடியாது. ஐரோப்பிய சந்தையில் உள்ள மாற்றத்தை பொறுத்து இங்கு எதிரொலிக்கும்

தங்கத்தில் பெரிய மாற்றம் இருக்காது. அதே போல வெள்ளியிலும். மாலை சிறிது ஏற்றத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்

உலோகங்களை பொறுத்தமட்டில் காப்பரும், ஜின்க்க்கும் ஏறலாம். மற்றவற்றில்  பெரிய மாற்றம் இருக்காது.

இன்று சந்தையை கொஞ்சம் தள்ளி நின்றே வேடிக்கை பார்ப்போம். மாலையில் இருக்கும் நகர்வை  பொறுத்தே முடிவு செய்யவேண்டும்

வியாழன், 21 ஜூலை, 2016

நத்தை போல நகரும் சந்தை

இன்று சந்தையில் காலையில் பெரிய நகர்வு இருக்காது. இருந்தால் அது மேலே தான் கொஞ்சம் கொஞ்சமாக ஏறும். மாலை நன்றாக இறங்கக் கூடும் என்று எதிர்பார்க்கிறோம்.

குருடாயிலில் எந்த பெரிய செய்திகளும் இல்லாததால் சிறிது மேலேறி விட்டு கீழே 3050 ஐ தொடும். அதற்கு கீழேயும் செல்லலாம். சென்றுவிட்டு மேலேறி 3080 வரை செல்லும் என்று எதிர்க்பார்க்கிறேன்

காப்பர் மேலே சென்றுவிட்டு கீழே ஐந்து புள்ளிகள் இறங்கக் கூடும்.

இன்று குறிப்பிடத்தக்க எந்த செய்திகளும் இல்லை என்பதால் சந்தை மேலும் கீழும் மாறி மாறி செல்லும். பொறுமையாக இருந்தால் இரு  திசையிலும் லாபம் சம்பாதிக்கலாம்

குருடாயில் - 20 புள்ளிகள் வரை மேலும் கீழும் செல்லும்
காப்பர் - 1.5 - 2 புள்ளிகள் வரை மேலும் கீழுமாக செல்லும்

Zinc - மேலேறிக்கொண்டே தான் செல்லும்


செவ்வாய், 19 ஜூலை, 2016

ட்ரேடிங்கிலும் விரதம் உண்டு

நேற்று ஒரு நண்பர் ஏன் இரண்டு நாட்களாக Market Calls கொடுக்கவில்லை என்றார்.

எல்லா நாளும் ட்ரேடிங்கில் பணம் எடுத்துவிடலாம் என்பதே முட்டாள்தனம் தான். ட்ரேடிங்கிலும் விரதம் இருக்கவேண்டும். அந்த மாதிரி நாட்களில் ட்ரேடிங் பக்கமே தலைவைத்து படுக்ககூடாது. அந்த சிந்தனையே இல்லாமல் வேறு வேலையை பார்க்க வேண்டும்

இல்லை என்னால் ட்ரேடிங் பண்ணாமல் இருக்க முடியாது. மார்கெட் என்ன விடுமுறையா.. இல்லையே ஏன் பண்ணக்கூடாது என்று கேட்பீர்கள் என்றால் நஷ்டத்துக்கு மார்கெட்டே கியாரண்டி கொடுக்கும்

இங்கே பலபேர் பத்து நாள் சம்பாதித்து ஒரு நாளில் எல்லாவற்றையும் விடுவார்கள். அது தான் மார்கெட்டின் சூட்சுமம்.

ஆகவே தான் நிதானமான ட்ரேடிங்கிற்கு விரதம் அவசியம் என்கிறோம்

இன்று குருடாயில் இறங்கி ஏறும். தங்கத்தில் பெரிய மாற்றம் இருக்காது. 60 முதல் 120 புள்ளிகள் வரை இறங்கக்கூடும். வெள்ளியிலும் பெரிய மாற்றம் இல்லை. காப்பர் கீழே ஐந்து புள்ளிகள் இறங்கி இரண்டு புள்ளிகள் ஏறும்

சின்ன லாபத்துடன் வெளியில் வருவது பாக்கெட்டுக்கு பாதுகாப்பு

திங்கள், 18 ஜூலை, 2016

துருக்கி வைக்க இருந்த ஆப்பு ஜஸ்ட் மிஸ்

துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற இருந்த நிலையில் மக்கள் புரட்சி அதை மாற்றிவிட குருடாயில் வர்த்தகத்தில் மீண்டும் ஒரு தேக்கநிலையே வந்துள்ளது.

கடந்த வெள்ளியன்று எதோ ஒன்றிற்காக மார்கெட் அமைதியாக இருக்கிறது என்று எழுதியிருந்தோம். அது என்னவென்று இப்போது புரிகிறது. துருக்கியின் ஆட்சி மாற்றம் எண்ணெய் வர்த்தகத்தில் ஒரு பெரிய எழுச்சியை கொண்டுவந்திருக்க வேண்டியது

துருக்கிக்கும் குருடாயிலுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால் துருக்கி தான் ஐரோப்பாவையும், வளைகுடா நாடுகளையும் இணைக்கும் பாலம். பாலத்தை ராணுவம் கைபற்றிஇருந்தால் ஐரோப்பாவிற்குள் குருடாயில் செல்லும் வழி அடைக்கப்பட்டிருக்கும். ஆக மிக எளிதாக குருடாயிலின் விலை எகிறி இருக்கும்.

இதெல்லாம் எதுவும் நடக்கவில்லை என்றவுடன் மீண்டும் மந்தநிலை தொடர்கிறது.

இன்றும் மந்தநிலை தொடரும் மாலை சிறிது உயரக்கூடும். மற்றபடி பெரிய மாற்றம் இருக்காது. இதே நிலை தான் தங்கத்திலும் தொடரும். மாலை இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்



வெள்ளி, 15 ஜூலை, 2016

புயலுக்கு முன்னே வரும் அமைதி

இன்று கமாடிட்டி சந்தை எந்த பெரிய ஆட்டமும் இல்லாமல் அமைதியாக இருக்கும் என நினைக்கிறோம்

இது ஒரு பெரிய முடிவிற்காக காத்துக் கொண்டிருப்பது போல தோன்றுகிறது. இன்று நீங்கள் பெரிதாக எதையும் சம்பாதிக்க முடியாது

இன்று பின்னிரவு  அல்லது திங்கள் முதல் ஒரு ஆட்டம் காட்டப்போகிறது. இன்று மொத்தமாக எதிலும் ட்ரேடிங் செய்யாமல் இருப்பது உத்தமம்

அப்படியும் கை அரித்தால், காப்பரில் Buy போகலாம் 338/340/342 டார்கெட்டாக  செய்து கொள்ளலாம். SL 2.5 புள்ளிகள் கீழே வைத்துக் கொள்ளுங்கள்


புதன், 13 ஜூலை, 2016

இன்றைய நிலவரம்

இன்று குருடாயிலில் Trade செய்யாமல் இருப்பது நல்லது. எந்த திசைக்கு வேண்டுமென்றாலும் செல்லும். கணிப்பது கடினம்

தங்கம் விலை இறங்கி இருக்கிறது. இது இன்னும் நூறு புள்ளிகள் இறங்கக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம்

வெள்ளியும் இருநூறு புள்ளிகள் இறங்கி 47200 ஐ தொட வாய்ப்பிருக்கிறது. 

செவ்வாய், 12 ஜூலை, 2016

இந்த நாள் இனிய நாள்

குருடாயில் வாடிக்கையாளர்களுக்கு இந்த நாள் இனிய நாள் என்று நினைக்கிறேன். மிக எளிதாக கணிக்க முடியும். 3120 ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறைந்தபட்சம் நாற்பது புள்ளிகள் இறங்கும் அதிகபட்சம் 80 புள்ளிகள் இறங்கக்கூடும். காலையில் Shorting ( Sell) போகலாம். மாலை ஐந்தரைக்கு மேல் கதை மாறும், மேலேறும்

தங்கமும் இன்று விழக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம். நூறு புள்ளிகள் வரை விழுந்து எழுந்திருக்கும்.

நாங்கள் ஏற்கனவே சொன்னது போல ஆகஸ்ட் இறுதியில் இருந்து தங்கம் விழுந்து அக்டோபர் முதல் வாரம் வரை விழுந்துகொண்டே இருக்கும். அதிகபட்சம் 29000 வரை கீழே விழ வாய்ப்பிருக்கிறது. ஆகவே பொறுத்தார் தங்கத்தை கம்மி விலையில் வாங்குவார்.


StopLoss-ஐ செட் செய்வதில் ஒரு சிறு நுணுக்கம்

StopLossஐ செட் செய்வதில் பலரும் பலவித கருத்துக்கள் சொல்வார்கள். நீங்கள் எந்த அளவுக்கு Target செய்கிறீர்களோ அதே அளவுக்கு StopLoss செய்யுங்கள் என்பார்கள். இது நல்லது தான். ஆனால் லாபம் எடுக்கும் முனைப்பில் 50% Risk உண்டு. நஷ்டம் அளவாக இருக்கும்.
பொதுவான வழக்கம் Pivot Levelஇல் முதல் Resistance Valueக்கு முதல் Supportஐ Stoploss ஆக Set செய்துகொள்வது தான். ஆரம்ப நிலையில் உள்ள புது Traderகள் இந்த முறையை பயன்படுத்தலாம்

நாங்கள் அறிவுறுத்தும் விதிமுறை - உங்கள் கணக்கில் எவ்வளவு முதலீடு இருக்கிறதோ அதில் அதிகபட்சம் 50% வரை செட் செய்துகொள்ளலாம். அதாவது 50% முதலீடை ரிசர்வ் செய்து வைத்துகொள்ளவேண்டும்.
இப்போது உங்கள் முதலீடு அதிகமாக இருக்கிறது. அதில் ஐம்பது சதவீதம் தொட வாய்ப்பே இல்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது கீழ்க்கண்ட வழிமுறையை பயன்படுத்தலாம்.
ஒரு கமாடிட்டியின் Average Trading Price - Low = Stop Loss ஆக அதிகபட்சம் செட் செய்துகொள்ளலாம். இது உங்கள் முதலீட்டின் 50% ஐ தின்னாமல் பார்த்துகொள்ளுங்கள். அவ்வளவு தான்.

பொறுத்தார் பணம் சம்பாதிப்பார்

நாங்கள் முன்பு சொல்லியிருந்த விதிமுறைப்படி எங்கள் Clients கடந்த பத்துநாட்களில் இரண்டு பேருக்கு Trading செய்து காண்பித்தோம். ( இதற்கு முன்பு வரை நாங்கள் மொபைல் ஆப்பில் ஆலோசனை மட்டும் தான் கொடுத்துவந்துள்ளோம்.)
முதல் நபர் ஒரு லட்சம் முதலீடு செய்திருந்தார். இரண்டாமானவர் இருபதாயிரம் முதலீடு செய்திருந்தார். முதல் நபருக்கு 15,000 லாபம் ஈட்டிக் கொடுத்தோம்
Brokerage Commission + Tax போக மீதி உள்ள லாபத்தில் 10,000 ரூபாயை அவரது Bank Account இல் Payout போட்டுவிட்டோம்.
இரண்டாவது நபருக்கு இரண்டு நாள் Trading இல் 7000 ரூபாய் லாபம் ஈட்டி அதில் 5000 அவரது வங்கி கணக்கில் சேர்த்துவிட்டோம்.
இது ஒரு புதுமுயற்சி என்பதைவிட புது பயிற்சி என்று சொல்லலாம். இந்த மாதம் இறுதியில் மொத்த Trading கணக்கையும் Screenshot எடுத்துக் காண்பிக்கிறோம்.
எதையும் மிகுந்த நிதானத்தோடும், தெளிவோடும் செய்தால் வெற்றி என்பதற்கு எங்களின் இந்த முயற்சி ஒரு உதாரணம்
ஆக பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது உண்மையோ இல்லையோ பணம் சம்பாதிப்பார் என்பார்
மேலதிக விபரங்கள் வேண்டுவோர் 9036782332 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அல்லது Support@fastura.com என்ற ஈமெயில் ஐடிக்கு மெயில் அனுப்புங்கள்
அல்லது https://play.google.com/store/apps/details… என்ற லின்க்கை சொடுக்கி எங்களது மொபைல் ஆப்பை download செய்து கொள்ளலாம்

கம்மாடிட்டி சந்தையில் வர்த்தகம் பாதுகாப்பானதா..

கம்மாடிட்டி சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் என்றாலே பார்த்துப்பா.. கவனமா இரு. இல்லாட்டி மொத்தத்தையும் அள்ளிடும்ன்னு பயமுருத்துருவங்க தான் அதிகம்.
உண்மை தான். ஆனால் பாதி உண்மை. அப்படியென்றால்மீதி உண்மை . எந்தளவிற்கு ரிஸ்க் இருக்கிறதோ அந்த அளவிற்கு, அதற்கும் மேல் லாபமும் இருக்கிறது
சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு ட்ரேடிங் செய்தால் காலம் முழுக்க ட்ரேடிங் செய்துகொண்டே இருக்கலாம்.

1. குறைந்தது 50000 - 100000 ரூபாய் முதலீடு போட்டு செய்வது பாதுகாப்பு. ஒரு நாளில் நான்கு காமாடிட்டியில் Trade செய்ய இது உதவும். இது உங்கள் உபரி பணமாக இருக்கவேண்டும். கடன் வாங்கியோ, நகையை அடமானம் வைத்தோ செய்யாதீர்கள். சின்னத் தொகையுடன் வர்த்தகத்தில் நுழையும் போது நீங்கள் அதிக கட்டுப்பாடுகளில் சிக்கிக்கொள்வீர்கள்
2. இது ஒரு குளோபல் சந்தை. ஒவ்வொரு கண்டத்திலும் சில முக்கியமான சந்தைகள் இருக்கும். அவரை திறக்கப்படும் போதும், மூடும் போதும் நமது சந்தையிலும் விலை ஏறவும் இறங்கவும் கூடும். பன்னாட்டு வர்த்தக செய்திகளை தொடர்ந்து படித்துவந்தால் நல்லது. பங்கு வர்த்தகம் ( Stock Market ) விழும்போதெல்லாம் காமாடிட்டி சந்தை எழுச்சி கொள்ளும். பங்கு வர்த்தகம் எழுச்சி கொள்ளும்போது கமாடிட்டி சந்தையில் சின்னதாக வீழ்ச்சி இருக்கும். இதையெல்லாம் கவனித்து வரவேண்டும்.
3. எனக்கு அதில் எல்லாம் நேரம் இல்லை என்று சொல்வீர்கள்என்றால் நல்ல Advisory கம்பெனிகளின் சேவையை நடுத்தரமான விலையாக இருந்தால் வாங்கிக்கொள்ளலாம். அவர்கள் இலவச Trial கொடுப்பார்கள். அதில் அவர்கள் கொடுத்த Calls(யோசனைகள்) வெற்றி பெற்றால் தொடர்ந்து வாங்கலாம். அவர்களது Callsகளின் Past Performance பார்த்து அதில் பெரும்பாலானவை வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே வாங்குங்கள்
4. அவர்கள் கொடுக்கும் Calls இல் Stop Lossஐ உறுதியாக போட்டுவிடுங்கள். ஒரு Target மட்டும் செட் செய்து அதை தொட்டவுடன் வெளியில் வந்துவிடுங்கள். StopLoss ஐ போடாமல் Trade செய்து தான் முக்கால்வாசி பேர் தோற்கிறார்கள். ஒரு நாள் தோற்றால் மறுநாள் வென்றுவிடலாம். ஆனால் உங்கள் கணக்கில் பணம் அதிகம் குறையாமல் இருக்கவேண்டும். அதற்கு StopLoss ரெம்ப முக்கியம்
5. உங்களுக்கு கிடைக்கும் லபாத்தையும் அதில்போட்டு அதிகம் வெல்லலாம் என்று நினைக்காதீர்கள். லாபத்தை அவ்வப்போது எடுத்துவிடுங்கள். உங்கள் முதலீட்டு பணத்தை மட்டும் தொடர்ந்து வைத்திருங்கள்
6. ஒரு லட்சம் போட்டு ஒரு லட்சம் எடுக்க முடியும். ஆனால் அதை உங்கள் இலக்காக வைத்துக் கொள்ளாதீர்கள். 25% லாபத்தை இலக்காக வைத்துக்கொண்டால் மனம் தெளிவாக இருக்கும். அதிகம் தவறு செய்யமாட்டோம்.
7. Brokerage Companyகள் கொடுக்கும் மும்மடங்கு, ஐந்துமடங்கு Limitகளை கொடுப்பார்கள். சில கம்பெனிகள் கணக்கில்லாமல் Limit கொடுப்பார்கள். இவற்றை வைத்து பத்தாயிரம் போட்டு லட்ச ரூபாய்க்கு கூட Trade செய்யமுடியும். ஆனால் செய்யாதீர்கள். முடிந்த அளவு குறைவான Limit வாங்குங்கள், முற்றிலும் வாங்காமல் உங்கள் முதலீட்டில் மட்டும் Trade செய்வது மிகவும் நல்லது.
8. காலையில் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும். நாங்கள் காலையில் கொடுக்கும் Calls தான் பெரும்பாலும் Target தொட்டிருக்கிறது. மாலையில் அமெரிக்க மார்க்கெட் திறப்பதால் Movement அதிகமாக இருக்கும். அப்போது எந்த புது வர்த்தகமும் செய்யாதீர்கள். காலையில் Trade போட்டிருந்தால் அது மாலையில் Target தொட்டுவிடும். மாலை 7 மணிக்கு மேல் Trade செய்துதான் பலபேர் நஷ்டத்தை அடைந்திருக்கிறார்கள்.
பயம் தான் உங்கள் தோல்விக்கு காரணமாக இருக்கும். நிதானமும் தைரியமும் எப்போதும் வெற்றியை கொடுக்கும். வாழ்கையில் மட்டும் அல்ல காமடிட்டி சந்தையில் கூட இது தான் நிதர்சனம்.
பெண்கள், வேலையில் ஓய்வு பெற்ற பெரியவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஐந்துநாள் மார்கெட்டில் இருந்துவிட்டு வாரத்தின் இறுதியில் கொண்டாடலாம். அலுவலகம் செல்பவர்கள் கூட செய்யலாம். எங்களது Mobile App உங்களுக்கு உதவும். எந்த Tensionஉம் இல்லாமல் மிக எளிதாக செய்ய எங்கள் Mobile App உதவும். இதில் மட்டுமே Past Performance எளிதாக பார்க்க கிடைக்கிறது. இது எங்களின் தரமான சேவைக்கு ஒரு உதாரணம்.
இது தான் எங்கள் App இன் முகவரி
https://play.google.com/store/apps/details…
அல்லது Google Play Store சென்று mcx accurate calls என்று டைப் செய்து தேடினால் முதல் மூன்று இடத்திற்குள் எங்கள் App "Commodity Market Tracker" வரும். Download செய்துபாருங்கள்.
நாங்கள் மட்டுமே 15 நாள் Free Trial கொடுக்கிறோம். விளம்பர தொந்தரவுகள் எதுவும் கிடையாது. முக்கியமான நேரத்தில் எங்கள் Market Calls வரும்போது Push Notification அலர்ட் வரும். அதை அப்படியே Follow பண்ணினால் கூட மாதம் 70000 வரை சம்பாதிக்க முடியும். முயற்சித்து பாருங்கள்