வியாழன், 28 ஜூலை, 2016

புயலுக்கு பின் அமைதி



நேற்று அடித்த புயலில் எல்லா கமாடிட்டியும் கீழே விழுந்தது. விழுந்தா உடனே எழுந்திருக்க இது குதிரையும் இல்லை, ரஜினியும் இல்லை.

பாதுகாப்பான ட்ரேடிங்கிற்கு இது நேரம் இல்லை. மீறி போனவங்களை எல்லாம் நல்லா வச்சு செய்கிறது

Crude Oil Movement 2810க்கும் 2045க்கும் வெறும் 35 புள்ளிகள் மட்டுமே இருக்கிறது

அதே போல ஜின்க் 146.10க்கும் 146.60க்கும் நடுவில் தான் ஓடுகிறது

காப்பர் 329 விட்டு நகரவே இல்லை. இப்படி இருந்தா எப்படி ட்ரேடிங் பண்ணுவது என்று எங்களது வாடிக்கையாளர்கள், ஆலோசகர்கள் புலம்புகிறார்கள்


இது இப்படிதான் இருக்கும், இன்னும் கீழே தான் போகும் நடுநடுவில் மேலேறி பயமுறுத்தும் என்கிறார்கள்


Stop Loss போட்டாலும் அடித்துவிடும், போடாவிட்டாலும் ஒரு பெரிய இறக்கமோ, ஏற்றமோ நடந்து கடுப்படிக்கும்.


எடுத்த கொஞ்ச லாபத்தையும் சுருட்டிவிடும் காலம் இது. மிக மிக கவனம். இன்னும் ஒரு வாரத்திற்கு சந்தை இப்படிதான் இருக்கும் ஆகவே Long Position இல் விற்று வாங்கலாம். அது கூட இன்று ஆபத்து தான். நாளை காலை மேலே ஏறும்போது Sell போவது நல்லது

புதன், 27 ஜூலை, 2016

மார்க்கெட் தூங்கும் போது தொந்தரவு பண்ணாதீங்க

மார்கெட் தூங்கி கொண்டிருக்கிறது. கடந்த ஒருவாரமாக இதுதான் நிலை. கடந்த இரண்டு நாட்களாக ஆழ்ந்த தூக்கம் என்று தான் சொல்லவேண்டும்

ஆசிய பங்கு சந்தையில் ஏற்றம் இருப்பதும், ஆயில் வர்த்தகத்தில் எந்தவித புதிய ஒப்பந்தங்களும் போடப்படாத நிலை இருப்பதும், அமெரிக்க தேர்தல் அருகில் வந்துகொண்டிருப்பதும் என பல காரணங்கள் உலக கமாடிட்டி சந்தையில் அசைவே இல்லாமல் இருப்பதற்கு.

இந்த மாதிரி சமயங்களில் மார்க்கெட்டை தொந்தரவே பண்ணக்கூடாது. தொந்தரவு பண்ணினால் நஷ்டம் மட்டுமே பரிசாக கிடைக்கும். இது உறுதி

சீன சந்தையும், இந்திய சந்தையும் இணைந்து Base Metalஇல் மட்டும் கொஞ்சம் ஆட செய்கிறது. அதிலும் Zinc மற்றும் Lead இல் மட்டும் இந்த ஆட்டம். காப்பர் போனாபோவுதுன்னு  மூன்று புள்ளிகள் ஏற இறங்க இருக்கிறது.

எமக்கு தெரிந்து எந்த Brokerage / Advisory கம்பெனி கொடுத்த காலும் பெரிய வெற்றி பெறவில்லை இந்த ஒரு வாரத்தில்

மாறாக விளைபொருள் சந்தையில் சொல்லிக்கொள்ளும் படி நல்ல நகர்வு  இருக்கிறது .ஆக NCDEX சந்தை வர்த்தகம் பரவாயில்லை. நன்றாக இருக்கிறது

MCX Traders இந்த வாரம் லீவு விட்டுவிடுங்கள். உங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு.  

திங்கள், 25 ஜூலை, 2016

இன்று ரிஸ்க் இருக்கு. பார்த்து செல்லுங்கள்

போன வெள்ளிக்கிழமை மிகப் பெரிய சறுக்கல்கள் இருந்ததால் பெரிதாக செய்தி எதுவும் போடவில்லை

இன்றும் அப்படியே தான் தொடர்கிறது. குருடாயில், காப்பர் இரண்டிலும்  சிறிது ஏற்றம் இருக்கும். குருட் 3040 வரை செல்லும், காப்பர் 338 ஐ  தொடும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனாலும் இதை உறுதியாக கூறமுடியாது. ஐரோப்பிய சந்தையில் உள்ள மாற்றத்தை பொறுத்து இங்கு எதிரொலிக்கும்

தங்கத்தில் பெரிய மாற்றம் இருக்காது. அதே போல வெள்ளியிலும். மாலை சிறிது ஏற்றத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்

உலோகங்களை பொறுத்தமட்டில் காப்பரும், ஜின்க்க்கும் ஏறலாம். மற்றவற்றில்  பெரிய மாற்றம் இருக்காது.

இன்று சந்தையை கொஞ்சம் தள்ளி நின்றே வேடிக்கை பார்ப்போம். மாலையில் இருக்கும் நகர்வை  பொறுத்தே முடிவு செய்யவேண்டும்

வியாழன், 21 ஜூலை, 2016

நத்தை போல நகரும் சந்தை

இன்று சந்தையில் காலையில் பெரிய நகர்வு இருக்காது. இருந்தால் அது மேலே தான் கொஞ்சம் கொஞ்சமாக ஏறும். மாலை நன்றாக இறங்கக் கூடும் என்று எதிர்பார்க்கிறோம்.

குருடாயிலில் எந்த பெரிய செய்திகளும் இல்லாததால் சிறிது மேலேறி விட்டு கீழே 3050 ஐ தொடும். அதற்கு கீழேயும் செல்லலாம். சென்றுவிட்டு மேலேறி 3080 வரை செல்லும் என்று எதிர்க்பார்க்கிறேன்

காப்பர் மேலே சென்றுவிட்டு கீழே ஐந்து புள்ளிகள் இறங்கக் கூடும்.

இன்று குறிப்பிடத்தக்க எந்த செய்திகளும் இல்லை என்பதால் சந்தை மேலும் கீழும் மாறி மாறி செல்லும். பொறுமையாக இருந்தால் இரு  திசையிலும் லாபம் சம்பாதிக்கலாம்

குருடாயில் - 20 புள்ளிகள் வரை மேலும் கீழும் செல்லும்
காப்பர் - 1.5 - 2 புள்ளிகள் வரை மேலும் கீழுமாக செல்லும்

Zinc - மேலேறிக்கொண்டே தான் செல்லும்


செவ்வாய், 19 ஜூலை, 2016

ட்ரேடிங்கிலும் விரதம் உண்டு

நேற்று ஒரு நண்பர் ஏன் இரண்டு நாட்களாக Market Calls கொடுக்கவில்லை என்றார்.

எல்லா நாளும் ட்ரேடிங்கில் பணம் எடுத்துவிடலாம் என்பதே முட்டாள்தனம் தான். ட்ரேடிங்கிலும் விரதம் இருக்கவேண்டும். அந்த மாதிரி நாட்களில் ட்ரேடிங் பக்கமே தலைவைத்து படுக்ககூடாது. அந்த சிந்தனையே இல்லாமல் வேறு வேலையை பார்க்க வேண்டும்

இல்லை என்னால் ட்ரேடிங் பண்ணாமல் இருக்க முடியாது. மார்கெட் என்ன விடுமுறையா.. இல்லையே ஏன் பண்ணக்கூடாது என்று கேட்பீர்கள் என்றால் நஷ்டத்துக்கு மார்கெட்டே கியாரண்டி கொடுக்கும்

இங்கே பலபேர் பத்து நாள் சம்பாதித்து ஒரு நாளில் எல்லாவற்றையும் விடுவார்கள். அது தான் மார்கெட்டின் சூட்சுமம்.

ஆகவே தான் நிதானமான ட்ரேடிங்கிற்கு விரதம் அவசியம் என்கிறோம்

இன்று குருடாயில் இறங்கி ஏறும். தங்கத்தில் பெரிய மாற்றம் இருக்காது. 60 முதல் 120 புள்ளிகள் வரை இறங்கக்கூடும். வெள்ளியிலும் பெரிய மாற்றம் இல்லை. காப்பர் கீழே ஐந்து புள்ளிகள் இறங்கி இரண்டு புள்ளிகள் ஏறும்

சின்ன லாபத்துடன் வெளியில் வருவது பாக்கெட்டுக்கு பாதுகாப்பு

திங்கள், 18 ஜூலை, 2016

துருக்கி வைக்க இருந்த ஆப்பு ஜஸ்ட் மிஸ்

துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற இருந்த நிலையில் மக்கள் புரட்சி அதை மாற்றிவிட குருடாயில் வர்த்தகத்தில் மீண்டும் ஒரு தேக்கநிலையே வந்துள்ளது.

கடந்த வெள்ளியன்று எதோ ஒன்றிற்காக மார்கெட் அமைதியாக இருக்கிறது என்று எழுதியிருந்தோம். அது என்னவென்று இப்போது புரிகிறது. துருக்கியின் ஆட்சி மாற்றம் எண்ணெய் வர்த்தகத்தில் ஒரு பெரிய எழுச்சியை கொண்டுவந்திருக்க வேண்டியது

துருக்கிக்கும் குருடாயிலுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால் துருக்கி தான் ஐரோப்பாவையும், வளைகுடா நாடுகளையும் இணைக்கும் பாலம். பாலத்தை ராணுவம் கைபற்றிஇருந்தால் ஐரோப்பாவிற்குள் குருடாயில் செல்லும் வழி அடைக்கப்பட்டிருக்கும். ஆக மிக எளிதாக குருடாயிலின் விலை எகிறி இருக்கும்.

இதெல்லாம் எதுவும் நடக்கவில்லை என்றவுடன் மீண்டும் மந்தநிலை தொடர்கிறது.

இன்றும் மந்தநிலை தொடரும் மாலை சிறிது உயரக்கூடும். மற்றபடி பெரிய மாற்றம் இருக்காது. இதே நிலை தான் தங்கத்திலும் தொடரும். மாலை இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்



வெள்ளி, 15 ஜூலை, 2016

புயலுக்கு முன்னே வரும் அமைதி

இன்று கமாடிட்டி சந்தை எந்த பெரிய ஆட்டமும் இல்லாமல் அமைதியாக இருக்கும் என நினைக்கிறோம்

இது ஒரு பெரிய முடிவிற்காக காத்துக் கொண்டிருப்பது போல தோன்றுகிறது. இன்று நீங்கள் பெரிதாக எதையும் சம்பாதிக்க முடியாது

இன்று பின்னிரவு  அல்லது திங்கள் முதல் ஒரு ஆட்டம் காட்டப்போகிறது. இன்று மொத்தமாக எதிலும் ட்ரேடிங் செய்யாமல் இருப்பது உத்தமம்

அப்படியும் கை அரித்தால், காப்பரில் Buy போகலாம் 338/340/342 டார்கெட்டாக  செய்து கொள்ளலாம். SL 2.5 புள்ளிகள் கீழே வைத்துக் கொள்ளுங்கள்


புதன், 13 ஜூலை, 2016

இன்றைய நிலவரம்

இன்று குருடாயிலில் Trade செய்யாமல் இருப்பது நல்லது. எந்த திசைக்கு வேண்டுமென்றாலும் செல்லும். கணிப்பது கடினம்

தங்கம் விலை இறங்கி இருக்கிறது. இது இன்னும் நூறு புள்ளிகள் இறங்கக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம்

வெள்ளியும் இருநூறு புள்ளிகள் இறங்கி 47200 ஐ தொட வாய்ப்பிருக்கிறது. 

செவ்வாய், 12 ஜூலை, 2016

இந்த நாள் இனிய நாள்

குருடாயில் வாடிக்கையாளர்களுக்கு இந்த நாள் இனிய நாள் என்று நினைக்கிறேன். மிக எளிதாக கணிக்க முடியும். 3120 ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறைந்தபட்சம் நாற்பது புள்ளிகள் இறங்கும் அதிகபட்சம் 80 புள்ளிகள் இறங்கக்கூடும். காலையில் Shorting ( Sell) போகலாம். மாலை ஐந்தரைக்கு மேல் கதை மாறும், மேலேறும்

தங்கமும் இன்று விழக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம். நூறு புள்ளிகள் வரை விழுந்து எழுந்திருக்கும்.

நாங்கள் ஏற்கனவே சொன்னது போல ஆகஸ்ட் இறுதியில் இருந்து தங்கம் விழுந்து அக்டோபர் முதல் வாரம் வரை விழுந்துகொண்டே இருக்கும். அதிகபட்சம் 29000 வரை கீழே விழ வாய்ப்பிருக்கிறது. ஆகவே பொறுத்தார் தங்கத்தை கம்மி விலையில் வாங்குவார்.


StopLoss-ஐ செட் செய்வதில் ஒரு சிறு நுணுக்கம்

StopLossஐ செட் செய்வதில் பலரும் பலவித கருத்துக்கள் சொல்வார்கள். நீங்கள் எந்த அளவுக்கு Target செய்கிறீர்களோ அதே அளவுக்கு StopLoss செய்யுங்கள் என்பார்கள். இது நல்லது தான். ஆனால் லாபம் எடுக்கும் முனைப்பில் 50% Risk உண்டு. நஷ்டம் அளவாக இருக்கும்.
பொதுவான வழக்கம் Pivot Levelஇல் முதல் Resistance Valueக்கு முதல் Supportஐ Stoploss ஆக Set செய்துகொள்வது தான். ஆரம்ப நிலையில் உள்ள புது Traderகள் இந்த முறையை பயன்படுத்தலாம்

நாங்கள் அறிவுறுத்தும் விதிமுறை - உங்கள் கணக்கில் எவ்வளவு முதலீடு இருக்கிறதோ அதில் அதிகபட்சம் 50% வரை செட் செய்துகொள்ளலாம். அதாவது 50% முதலீடை ரிசர்வ் செய்து வைத்துகொள்ளவேண்டும்.
இப்போது உங்கள் முதலீடு அதிகமாக இருக்கிறது. அதில் ஐம்பது சதவீதம் தொட வாய்ப்பே இல்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது கீழ்க்கண்ட வழிமுறையை பயன்படுத்தலாம்.
ஒரு கமாடிட்டியின் Average Trading Price - Low = Stop Loss ஆக அதிகபட்சம் செட் செய்துகொள்ளலாம். இது உங்கள் முதலீட்டின் 50% ஐ தின்னாமல் பார்த்துகொள்ளுங்கள். அவ்வளவு தான்.

பொறுத்தார் பணம் சம்பாதிப்பார்

நாங்கள் முன்பு சொல்லியிருந்த விதிமுறைப்படி எங்கள் Clients கடந்த பத்துநாட்களில் இரண்டு பேருக்கு Trading செய்து காண்பித்தோம். ( இதற்கு முன்பு வரை நாங்கள் மொபைல் ஆப்பில் ஆலோசனை மட்டும் தான் கொடுத்துவந்துள்ளோம்.)
முதல் நபர் ஒரு லட்சம் முதலீடு செய்திருந்தார். இரண்டாமானவர் இருபதாயிரம் முதலீடு செய்திருந்தார். முதல் நபருக்கு 15,000 லாபம் ஈட்டிக் கொடுத்தோம்
Brokerage Commission + Tax போக மீதி உள்ள லாபத்தில் 10,000 ரூபாயை அவரது Bank Account இல் Payout போட்டுவிட்டோம்.
இரண்டாவது நபருக்கு இரண்டு நாள் Trading இல் 7000 ரூபாய் லாபம் ஈட்டி அதில் 5000 அவரது வங்கி கணக்கில் சேர்த்துவிட்டோம்.
இது ஒரு புதுமுயற்சி என்பதைவிட புது பயிற்சி என்று சொல்லலாம். இந்த மாதம் இறுதியில் மொத்த Trading கணக்கையும் Screenshot எடுத்துக் காண்பிக்கிறோம்.
எதையும் மிகுந்த நிதானத்தோடும், தெளிவோடும் செய்தால் வெற்றி என்பதற்கு எங்களின் இந்த முயற்சி ஒரு உதாரணம்
ஆக பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது உண்மையோ இல்லையோ பணம் சம்பாதிப்பார் என்பார்
மேலதிக விபரங்கள் வேண்டுவோர் 9036782332 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அல்லது Support@fastura.com என்ற ஈமெயில் ஐடிக்கு மெயில் அனுப்புங்கள்
அல்லது https://play.google.com/store/apps/details… என்ற லின்க்கை சொடுக்கி எங்களது மொபைல் ஆப்பை download செய்து கொள்ளலாம்

கம்மாடிட்டி சந்தையில் வர்த்தகம் பாதுகாப்பானதா..

கம்மாடிட்டி சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் என்றாலே பார்த்துப்பா.. கவனமா இரு. இல்லாட்டி மொத்தத்தையும் அள்ளிடும்ன்னு பயமுருத்துருவங்க தான் அதிகம்.
உண்மை தான். ஆனால் பாதி உண்மை. அப்படியென்றால்மீதி உண்மை . எந்தளவிற்கு ரிஸ்க் இருக்கிறதோ அந்த அளவிற்கு, அதற்கும் மேல் லாபமும் இருக்கிறது
சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு ட்ரேடிங் செய்தால் காலம் முழுக்க ட்ரேடிங் செய்துகொண்டே இருக்கலாம்.

1. குறைந்தது 50000 - 100000 ரூபாய் முதலீடு போட்டு செய்வது பாதுகாப்பு. ஒரு நாளில் நான்கு காமாடிட்டியில் Trade செய்ய இது உதவும். இது உங்கள் உபரி பணமாக இருக்கவேண்டும். கடன் வாங்கியோ, நகையை அடமானம் வைத்தோ செய்யாதீர்கள். சின்னத் தொகையுடன் வர்த்தகத்தில் நுழையும் போது நீங்கள் அதிக கட்டுப்பாடுகளில் சிக்கிக்கொள்வீர்கள்
2. இது ஒரு குளோபல் சந்தை. ஒவ்வொரு கண்டத்திலும் சில முக்கியமான சந்தைகள் இருக்கும். அவரை திறக்கப்படும் போதும், மூடும் போதும் நமது சந்தையிலும் விலை ஏறவும் இறங்கவும் கூடும். பன்னாட்டு வர்த்தக செய்திகளை தொடர்ந்து படித்துவந்தால் நல்லது. பங்கு வர்த்தகம் ( Stock Market ) விழும்போதெல்லாம் காமாடிட்டி சந்தை எழுச்சி கொள்ளும். பங்கு வர்த்தகம் எழுச்சி கொள்ளும்போது கமாடிட்டி சந்தையில் சின்னதாக வீழ்ச்சி இருக்கும். இதையெல்லாம் கவனித்து வரவேண்டும்.
3. எனக்கு அதில் எல்லாம் நேரம் இல்லை என்று சொல்வீர்கள்என்றால் நல்ல Advisory கம்பெனிகளின் சேவையை நடுத்தரமான விலையாக இருந்தால் வாங்கிக்கொள்ளலாம். அவர்கள் இலவச Trial கொடுப்பார்கள். அதில் அவர்கள் கொடுத்த Calls(யோசனைகள்) வெற்றி பெற்றால் தொடர்ந்து வாங்கலாம். அவர்களது Callsகளின் Past Performance பார்த்து அதில் பெரும்பாலானவை வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே வாங்குங்கள்
4. அவர்கள் கொடுக்கும் Calls இல் Stop Lossஐ உறுதியாக போட்டுவிடுங்கள். ஒரு Target மட்டும் செட் செய்து அதை தொட்டவுடன் வெளியில் வந்துவிடுங்கள். StopLoss ஐ போடாமல் Trade செய்து தான் முக்கால்வாசி பேர் தோற்கிறார்கள். ஒரு நாள் தோற்றால் மறுநாள் வென்றுவிடலாம். ஆனால் உங்கள் கணக்கில் பணம் அதிகம் குறையாமல் இருக்கவேண்டும். அதற்கு StopLoss ரெம்ப முக்கியம்
5. உங்களுக்கு கிடைக்கும் லபாத்தையும் அதில்போட்டு அதிகம் வெல்லலாம் என்று நினைக்காதீர்கள். லாபத்தை அவ்வப்போது எடுத்துவிடுங்கள். உங்கள் முதலீட்டு பணத்தை மட்டும் தொடர்ந்து வைத்திருங்கள்
6. ஒரு லட்சம் போட்டு ஒரு லட்சம் எடுக்க முடியும். ஆனால் அதை உங்கள் இலக்காக வைத்துக் கொள்ளாதீர்கள். 25% லாபத்தை இலக்காக வைத்துக்கொண்டால் மனம் தெளிவாக இருக்கும். அதிகம் தவறு செய்யமாட்டோம்.
7. Brokerage Companyகள் கொடுக்கும் மும்மடங்கு, ஐந்துமடங்கு Limitகளை கொடுப்பார்கள். சில கம்பெனிகள் கணக்கில்லாமல் Limit கொடுப்பார்கள். இவற்றை வைத்து பத்தாயிரம் போட்டு லட்ச ரூபாய்க்கு கூட Trade செய்யமுடியும். ஆனால் செய்யாதீர்கள். முடிந்த அளவு குறைவான Limit வாங்குங்கள், முற்றிலும் வாங்காமல் உங்கள் முதலீட்டில் மட்டும் Trade செய்வது மிகவும் நல்லது.
8. காலையில் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும். நாங்கள் காலையில் கொடுக்கும் Calls தான் பெரும்பாலும் Target தொட்டிருக்கிறது. மாலையில் அமெரிக்க மார்க்கெட் திறப்பதால் Movement அதிகமாக இருக்கும். அப்போது எந்த புது வர்த்தகமும் செய்யாதீர்கள். காலையில் Trade போட்டிருந்தால் அது மாலையில் Target தொட்டுவிடும். மாலை 7 மணிக்கு மேல் Trade செய்துதான் பலபேர் நஷ்டத்தை அடைந்திருக்கிறார்கள்.
பயம் தான் உங்கள் தோல்விக்கு காரணமாக இருக்கும். நிதானமும் தைரியமும் எப்போதும் வெற்றியை கொடுக்கும். வாழ்கையில் மட்டும் அல்ல காமடிட்டி சந்தையில் கூட இது தான் நிதர்சனம்.
பெண்கள், வேலையில் ஓய்வு பெற்ற பெரியவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஐந்துநாள் மார்கெட்டில் இருந்துவிட்டு வாரத்தின் இறுதியில் கொண்டாடலாம். அலுவலகம் செல்பவர்கள் கூட செய்யலாம். எங்களது Mobile App உங்களுக்கு உதவும். எந்த Tensionஉம் இல்லாமல் மிக எளிதாக செய்ய எங்கள் Mobile App உதவும். இதில் மட்டுமே Past Performance எளிதாக பார்க்க கிடைக்கிறது. இது எங்களின் தரமான சேவைக்கு ஒரு உதாரணம்.
இது தான் எங்கள் App இன் முகவரி
https://play.google.com/store/apps/details…
அல்லது Google Play Store சென்று mcx accurate calls என்று டைப் செய்து தேடினால் முதல் மூன்று இடத்திற்குள் எங்கள் App "Commodity Market Tracker" வரும். Download செய்துபாருங்கள்.
நாங்கள் மட்டுமே 15 நாள் Free Trial கொடுக்கிறோம். விளம்பர தொந்தரவுகள் எதுவும் கிடையாது. முக்கியமான நேரத்தில் எங்கள் Market Calls வரும்போது Push Notification அலர்ட் வரும். அதை அப்படியே Follow பண்ணினால் கூட மாதம் 70000 வரை சம்பாதிக்க முடியும். முயற்சித்து பாருங்கள்