வியாழன், 13 அக்டோபர், 2016

குருடாயில் விலையும், இயற்கை எரிவாயு விலையும்

அமெரிக்க தேர்தல் கம்மாடிட்டி சந்தையில் போக்கை மாற்றி இருக்கிறது. அமெரிக்க காபந்து அரசு எந்த முக்கியமுடிவும் எடுக்க முடியாது, அறிவிக்கவும் முடியாது என்பதால் இந்த நேரத்தை ரஷ்யாவும், OPEC நாடுகளும் நன்கு பயன்படுத்திகொண்டுள்ளது. ஆகவேதான் குருடாயில் விலையும், இயற்கை எரிவாயு விலையும் ஏற்றம் காண்கிறது. தங்கம் கீழே அதிகமாகவும், மேலே சற்று எழுந்தும் செல்கிறது.

வரும் வாரம் முழுக்க இப்படிதான் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். குருடாயில் விலை ஐம்பதை தாண்டி ஒருவாரமாக சென்று கொண்டிருக்கிறது. OPEC நாடுகளின் செய்திகள் மட்டுமே இந்த குறுகிய காலத்தில் எடுபடும். அமெரிக்க வேலைவாய்ப்பு புள்ளி, குருடாயில் கையிருப்பு புள்ளிகள் எல்லாம் பெரிதாக வேலை செய்யாது. 

இன்று குருடாயில் மேலே தான் செல்லும். இயற்கை எரிவாயு சற்று கீழே இறங்கிவிட்டு மேலே செல்வார்கள். தங்கம் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் நூறு புள்ளிகள் கீழே இறங்கும். வெள்ளி முன்னூறு புள்ளிகள் இறங்கலாம். இன்று எந்த முக்கிய வணிக செய்திகள் பகல் பொழுதில் இல்லை என்பதால் பெரிய ஏற்றம் இறக்கம் இருக்காது. 

இன்று மாலை குருடாயில் எந்த திசையில் செல்கிறதோ அந்த திசையில் POSITION செல்வது நல்லது. திங்கள் கிழமை உங்களுக்கு நல்ல விலை கிடக்கும் விற்றுவிடுங்கள்.

அவ்வப்போது நடக்கும் தகவல்களை அறிய இந்த ஆப்பை தரவிறக்கி கொள்ளுங்கள். 

https://play.google.com/store/apps/details?id=com.fastura.mcx

புதன், 12 அக்டோபர், 2016

தங்கமும் வெள்ளியும் வீழும் மேலும்

தங்கத்தின் விலை இறங்கி வருகிறதே மீண்டும் மேலே ஏறும் என்று நினைத்து mcx இல் Buy போவது நல்லதல்ல. அது மீண்டும் மீண்டும் இறங்கவே  செய்யும்.

தங்கத்தில் போட்ட முதலீடுகள் அனைத்தையும் Forex சந்தையிலும், பங்கு சந்தையிலும் முதலீடு செய்வார்கள். இது ஒருபுறம் என்றால் மறுபுறம் சர்வதேச நாடுகள் தங்களின் கையிருப்பில் உள்ள தங்கத்தை சந்தைக்கு திறந்துவிடும் காலமும் இதுதான் என்பதால் சந்தையில் தங்கத்தின் விலை மேலும் மேலும் சரியவே கூடும். இன்னுமொரு காரணம் அமெரிக்க தேர்தல். இந்த நேரத்தில் அமெரிக்க ஒரு காபந்து அரசு மட்டுமே. எந்த பொருளாதார முடிவுகள் எதுவும் எடுக்கமாட்டார்கள்.

அமேரிக்கா சும்மா இருந்தாலே சர்வதேச நாடுகளுக்கு தானாக பலன்கிடைக்கும் என்ற கணிப்பின் படியும் தங்கம் இறங்கவே செய்யும். அதே காரணத்தினால் தான் குருடாயிலின் விலையும் மேலே ஏறும். அமெரிக்க அரசு அதிகாரத்தில் இருக்கும்போது அவர்கள் குருடாயிலின் விலையை குறைக்கவே முயல்வார்கள். காபந்து அரசினால் எதுவும் செய்ய முடியாது என்பதால் opec நாடுகளின் முடிவு செல்லுபடியாகிறது.

நவம்பர் 15 வரை குருடாயில் மேலே ஏறவே செய்யும். தங்கம் கீழே இறங்கவே செய்யும்.  

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

இழுத்துக்கோ பறிச்சுக்கோ

கடந்த மூன்று வாரங்களாக இந்தப் பக்கத்தில் எதுவும் எழுத முடியவில்லை. மேலும் சந்தையின் போக்கும் மிக மோசமான அளவிற்கு எழுச்சியும் வீழ்ச்சியும் இருந்தது.

தங்கம் ஒரே நாளில் 600 புள்ளிகள் ஏறுவதும் இறங்குவதும், வெள்ளி 1500 புள்ளிகள் வரை ஏறவும் இறங்கவும் இருந்தது. செப்டெம்பர் மாதம் எப்பொழுதும் வீழ்ச்சியை காணும் தங்கமும், வெள்ளியும் இந்த வருடம் பெரும் எழுச்சியை கண்டது. காரணம் உலக பங்குசந்தையின் மந்த நிலையும், தொழில் வீழ்ச்சியுமே ஆகும். ஸ்திரமான ஆசிய சந்தை கூட இந்த மாதத்தில் தள்ளாடுகிறது. ஆக இதன் எதிரொலியாக தங்கத்திலும், வெள்ளியிலும், காப்பரிலும் முதலீடு அதிகரிக்கிறது.

காப்பர் ஏற வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அதனின் தேவை குறைந்துவிட்டது. இந்த நிலையில் தங்கத்தின் மீதான டிமாண்ட் காப்பரிலும் எதிரொலிக்கிறது.


குருடாயில் வர்த்தகத்தை Tug of Warஇல் ஒருபுறம் அமெரிக்காவும் மறுபுறம் ரஷ்யா, அரபுநாடுகள், வெனிசுலா போன்றவை மறுபுறமும் இழுக்கின்றன. இதில் சவூதி அரேபியா இருபுறம் நகர்ந்து ஜோக்கர் வேலையை பார்க்கிறது. ஆக குருடாயில் வர்த்தகம் ஒரு கண்ணாமூச்சியை நடத்துகிறது. பகலில் Buy செல்லுங்கள், இரவு 8.20 க்கு மேல் எத்தனை பொசிஷன் இருந்தாலும் வெளியில் வந்துவிடுவது நல்லது.

நேச்சுரல்கேஸ் பாதுகாப்பான வர்த்தகமாக இருக்கிறது. தினமும் நாலு புள்ளிகள் நகர்கிறது. உச்சியை தொட்டுவிட்டு கீழே இறங்கும் அல்லது அடியை தொட்டுவிட்டு மேலே ஏறும். நடுவில் Direction மாறாமல் ஒரே திசையில் செல்கிறது

பேஸ் மெட்டல்ஸ் ரெம்பவும் மேலே ஏறாது. ஆக மேலே வரும்போது Sell போவது நல்லது.

புதன், 7 செப்டம்பர், 2016

சதிராடும் குருடாயில்



கடந்த ஒரு மாதமாகவே குருடாயில் வர்த்தகத்தில் ஒரு தேக்கநிலையும் குழப்பமும் நிலவுகிறது. நாங்கள் எங்களுக்கு வரும் வர்த்தக செய்திகளின் அடிப்படையில் தான் ஆலோசனைகள் கொடுப்போம்.




சமீப காலமாக ரஷ்யா மற்றும ஆயில் உற்பத்தி நாடுகள் ஒருபுறமும், அமெரிக்கா ஒருபுறமும் கடும் பூசலில் இருக்கிறார்கள். சிலகாலம் முன்பு வரை எங்களுக்கு வரும் செய்திகள் எல்லாம் ஒரே திசையில் இருக்கும். இப்போது குருடாயில் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளோம் என்று OPEC Secretary General Mohammed Barkindo ஒரு புறம் சொல்வார். அதையே ரஷ்ய எனர்ஜி மினிஸ்டரும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று சொல்வார். ஆக குருடின் விலை ஏறப் போகிறது என்று நினைக்கும்போது சத்தமில்லாமல் அமெரிக்கா உப்புசப்பில்லாத காரணங்களால் ( US Job Claims Index Rise, Canadian Forex Rise) விலையை இறக்குவார்கள்.

நேற்று குருடாயில் ஸ்டாக் inventory ரிப்போர்ட் வரப்போகிறது என்று 8 மணிவரை காத்திருக்க கடந்த திங்கள் அமெரிக்க அரசு விடுமுறை என்பதால் இன்று இரவு எட்டு மணிக்கு வெளியாகும் என்கிறார்கள்.


அமெரிக்க அரசின் ஒரே நோக்கம் ரஷ்யாவின் வர்த்தகத்தை முழுமையாக வீழ்த்தி கிரிஸ்ஸின் நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்று வீம்பாக குருடாயிலை ஏறாமல் பார்த்துக்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இதற்கு அமெரிக்காவிற்கு தோள் கொடுத்த அரபு நாடுகளும் பொருளாதார சிக்கலை சந்திப்பதால் இப்போது உற்பத்தியை குறைக்கிறார்கள். இருந்தபோதும் ப்ரென்ட் ஆயிலின் உதவியால் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இந்த விலைக்குறைப்பு பிற இறக்குமதி நாடுகளுக்கும் சாதகமாக இருப்பதால் அமெரிக்காவிற்கு பெரிய எதிர்ப்பு இல்லை.

இந்த நிலையற்ற தன்மையின் காரணமாகவே கடந்த சில நாட்களாக நாங்கள் எந்த செய்தியையும் இங்கு பதியவில்லை. எங்கள் ஆப்பில் கொடுத்த callsகளும் தோல்வியை தழுவின.

வரும் 26 முதல் 28க்குள் ரஷ்யா தலைமையிலான ஆயில் உற்பத்தி செய்யாத நாடுகளுடன் சவூதி தலைமையிலான ஆயில் உற்பத்தி நாடுகள் கலந்தாய்வு நடத்த உத்தேசித்து இருக்கிறார்கள். அதுவரை இந்த குழப்பம் நீடிக்கும் என்று தான் சொல்கிறார்கள். மறுபுறம் அமேரிக்கா என்ன சதி செய்ய காத்திருக்கிறது என்று மர்மமாக உள்ளது

இன்று இரவு வரை குருடாயில் வர்த்தகத்தில் எந்த பெரிய மாற்றமும் இருக்காது. ஆகவே இரவு ஒரு புதிய பதிவு இடுவோம்

வியாழன், 1 செப்டம்பர், 2016

குருடாயில் அரசியல்

குருடாயில் அரசியல் மிகவும் சூடு பிடித்திருக்கிறது. ஒரு பக்கம் அமேரிக்கா, இன்னொரு பக்கம் ரஷ்யா, சவுதி, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் ( OPEC) . இந்த இரண்டுக்கும் நடுவிலான போட்டியில் அமெரிக்காவின் கரம் இப்போது ஓங்கி இருக்கிறது

நேற்று இரண்டு செய்திகள் பகலில் வந்தது. OPEC நாடுகள் கடந்த இரண்டாண்டுகளாக சந்தித்துவரும் பொருளாதார சரிவை மீட்க குருடாயிலின் உற்பத்தியை குறைத்தாக வேண்டிய சூழல் இருக்கிறது என்று கூட்டமைப்புகளின் செய்தி தொடர்பாளர் சொல்கிறார்.


மற்றொரு செய்தி குருடாயில் 45$க்கும் கீழே சென்றதால் அதன் லெவலை தொட மீண்டும் 45$ தொட மேலே எத்தனிக்கும் என்று. இந்தஇரண்டு செய்திகளும் நிச்சயம் குருடாயிலை ஏற்றி இருக்க வேண்டும்.

ஆனால் நேற்று நடந்ததே வேறு. குருடாயில் கீழே தள்ளப்பட்டது USD/CAD டாலர் விலை கடந்த மூன்று வாரத்தில் அதிக உச்சம் கண்டதும், US Jobless Claim Index மேலே உயர்ந்தது குருடாயிலை மேலும் கீழே தள்ளியது. இது அத்தனையும் அமெரிக்க அரசின் சித்து விளையாட்டுக்கள்.

இன்று ஆசிய சந்தையில் சின்னதாக ஏற்றம் கண்டாலும் இது கீழே தான் இறங்கக்கூடும். அப்படி ஒரு முடிவோடு செயல்படுகிறது அமெரிக்க சந்தை

நேற்று நாங்கள் கொடுத்த கால்ஸ் இரண்டும் சொதப்பியதன் பின்னணி இது தான். ஸ்டாப் லாஸ் வைத்ததால் பெரிய நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடிந்தது.

இன்று தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது. நூறு புள்ளிகள் கீழே இறங்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. மாலை மேலே நூற்றி இருபது புள்ளிகள் ஏறக்கூடும்

புதன், 31 ஆகஸ்ட், 2016

குருடாயில் எழுச்சி காணுமா இன்று

நேற்று அமெரிக்காவின் குருடாயில் இருப்பு தேவைக்கும் அதிகமாக நிறைய இருப்பதாக வரவும் குருடாயில் விழ ஆரம்பித்தது. பிறகு அமெரிக்க வர்த்தகர்களின் பொருளாதார நம்பிக்கை கணக்கெடுப்பு சாதகமான முடிவை கொடுத்ததால் குருடாயில் மேலும் விழக் காரணமாக இருந்தது. இன்று ஆசிய சந்தை குருடாயில் ஏறும் என்ற நம்பிக்கையில் இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி வருகிறது.  3100 ஐ உடைத்தால் மேலும் கீழே இறங்கி 3060 இல் சென்று முடியும். மேலும் இன்று இரவு Inventory இருக்கிறது. அது சமயம் மேலும் கீழும் 40 புள்ளிகள் ஏறி இறங்கும். எப்படி இருந்தாலும் கீழே தான் முடிப்பார்கள் என்று நம்பப்படுகிறது

காப்பர் தினமும் 1.5 புள்ளிகள் என குறைந்துகொண்டே வருகிறது. இது இன்னும் குறையும். மாலை சற்று ஏறலாம். காரணம் Aug Contract இன்றோடு முடிவதால் இதில் எடுத்து அடுத்த மாத Contract இல் போட வாய்ப்புண்டு.

காப்பர் மட்டுமல்ல, அனைத்து உலோக கம்மாடிட்டிகளும் இன்றுடன் காண்ட்ராக்ட் முடிவதால் மாலைக்கு பிறகு ஏறத்துவங்கலாம்

தங்கம் நாங்கள் முன்பே சொன்னதை போல விழ ஆரம்பித்து விட்டது. இனி செப்டெம்பர் மாதம் முழுதும் விழப் போகிறது

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

MCX இல் கணக்கு தொடங்குவது எப்படி

MCX எனப்படும் பொருள் வணிகத்தில் வர்த்தகம் செய்ய தனியே கணக்கு தொடங்கவேண்டும். பங்கு வர்த்தகத்தில் உள்ள Demat கணக்கு இதற்கு பொருந்தாது

இந்தியா முழுக்க 2400க்கும் அதிகமான Brokerage Companyகள் MCX இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்றில் கணக்கை தொடங்கலாம்.

அதற்கு பின்வரும் ஆவணங்கள் உங்களிடம் இருக்க வேண்டும்

1. Address Proof
2. Id Proof
3. Pan Card
4. Cancelled Cheque / Recent Bank Statement
5. Photo

Cancelled Cheque - என்பது உங்கள் வங்கி காசோலையை குறுக்கே அடித்து CANCELLED என்று பெரிதாக எழுதவேண்டும்.

இவற்றுடன் நீங்கள் கணக்கு தொடங்கும் Brokerage Companyயின் விண்ணப்பபடிவத்தையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

பொதுவாக Brokerage Companyகளை அணுகினால் அவர்களின் விற்பனை பிரதிநிதிகள் உங்களை தேடிவந்து அனைத்தையும் செய்து கொடுப்பார்கள்.

பெரிய Brokerage கம்பெனிகள் இதற்கு தனியே உங்களிடம் கட்டணம் வசூலிப்பார்கள். Brokerage Charge மிக அதிகமாக சொல்வார்கள்.
0.03% முதல் 0.07% வரை சொல்வார்கள்.

இன்னும் சில கம்பெனிகள் முன்னரே உங்களிடம் Brokerage Commission 5000 முதல் 10000 வரை வாங்கிகொள்வார்கள். அதற்கு 0% brokerage என்று சொல்வார்கள். ஆனால் எதுவும் ஜீரோ அல்ல, தந்திரம். நீங்கள் வர்த்தகம் செய்தாலும் செய்யாவிட்டாலும் ஒரே வர்த்தகத்தில் நீங்கள் வெளியேற முடிவு செய்தாலும் இந்த advanced brokerage commission திரும்பி வரவே வராது.

போதாதென்று உங்களிடம் Margin Cheque ஒன்றையும் வாங்கி கொள்வார்கள். அதாவது ஒரு அதிரடி இறக்கத்தில் மாட்டி உங்கள் கணக்கில் உள்ள தொகை அத்தனையும் கழிந்தது போக மைனஸ்ஸில் சென்றால் அதை பைசா மிச்சமில்லாமல் கறந்துவிடுவார்கள். தப்பித்தவறி கூட அவர்களுக்கு நஷ்டம் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அதில் தவறில்லை தான். ஆனால் சில சமயம் அவர்கள் தரப்பில் தவறுகள் இருந்தாலும் பலியாடு நீங்கள் தாம்.

ஒரு கம்பெனியில் MCX கணக்கு தொடங்கும் முன் கீழ்காணும் விஷயங்களில் கறாராக இருங்கள்

1. Advanced Brokerage Commission கொடுக்காதீர்கள்
2. கணக்கு தொடங்குவதற்கு 300 முதல் 750 வரை கேட்பார்கள். கொடுக்காதீர்கள். நிறைய கம்பெனிகள் இதை இலவசமாக செய்கிறார்கள்
3. சரியான விளக்கமில்லாமல் Margin Cheque கொடுக்காதீர்கள்
4. 0.03% க்கும் மேல் Brokerage Commission கொடுக்காதீர்கள். பேசினால் குறைப்பார்கள்
5. உங்களிடம் ஆவணங்களை வாங்கி பத்து நாட்களுக்குள் கணக்கு தொடங்கவில்லையென்றால் விளக்கம் கேளுங்கள். பதில் திருப்தியாக இல்லையென்றால் திரும்ப தந்துவிட வற்புறுத்துங்கள்.
6. Payout எனப்படும் பணத்தை மீண்டும் உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும் விசயத்தில் 24 மணி நேரத்திற்கு மேல் தாமதிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருங்கள். (வார இறுதியை தவிர்த்து)

பெரிய கம்பெனிகளிடம் சில வசதிகளும் உண்டு

1. சில கம்பெனிகள் Chart இலவசமாக கொடுப்பார்கள்.
2. Mobile Trading வசதி செய்துகொடுப்பார்கள்
3. PayIn எளிதாக இருக்கும். உங்கள் MCX கணக்குடன் Online Payment Method இணைக்கப்பட்டிருக்கும். ஆகவே அவசரமாக உங்கள் கணக்கில் பணம் செலுத்தி வர்த்தகம் செய்ய முடியும். சிறிய கம்பெனிகளில் நீங்கள் பணம் செலுத்திய பிறகு அவர்களுக்கு போனில் அழைத்து சொல்லவேண்டும்.

சிறிய கம்பெனிகளிடம் உள்ள வசதிகள்

1. Account Opening Charge இருக்காது. Account Opening நடைமுறை மிக எளிதாக இருக்கும். ஒரே நாளில் கூட கணக்கை தொடங்கிவிடலாம்.
2. Brokerage Commission மிக குறைவாக இருக்கும்.
3. Margin Cheque கட்டாயம் கிடையாது. Limit அதிகம் கேட்டீர்கள் என்றால் இதை கேட்பார்கள்.
4. Payout பெரும்பாலும் ஒரே நாளில் செய்துவிடுவார்கள்.
5. Limit நீங்கள் விரும்பிய அளவு கொடுப்பார்கள். Limit அதிகம் எடுக்கும் போது இரண்டு பக்கமும் ரிஸ்க் இருக்கிறது.
6. Support மிக நன்றாக இருக்கும். அவர்களை பொறுத்தவரையில் ஒரு கஸ்டமர் கூட விட்டுச்சென்றுவிடக் கூடாது என்று நினைப்பார்கள்
7. எந்நேரம் கால் செய்தாலும் பொதுவாக லைன் கிடைக்கும்.


Limit என்பது குறைவான முதலீட்டில் அதிக அளவு கொள்முதல் செய்ய முடியும். பொதுவாக பெரிய நிறுவனங்களில் உங்கள் கணக்கில் உள்ள பணத்திற்கு 60% மேல் நஷ்டம் வரும்போது வர்த்தகத்தை அவர்களே முடித்துவைத்து வெளியேற்றிவிடுவார்கள். இதுவே சிறிய நிறுவனங்களில் அவர்களுடன் நல்ல நட்பில் இருந்தால் 80% ஏன் அதற்கும் மேலும் கூட ரிஸ்க் எடுத்து செய்வார்கள்.

கணக்கு தொடங்கியவுடன் நீங்கள் எந்த வங்கியின் காசோலையை கொடுத்தீர்களோ அதே வங்கியில் இருந்து காசோலை மூலமாகவோ அல்லது Net Banking மூலமாக NEFT / RTGS / Interbank Transfer மூலமாக செய்யலாம். IMPS செய்யும் போது Reference Number ஐ தவிர்த்து அனுப்பியவர் பெயர் வருவதில்லை. ஆகவே நிறுவனத்திடம் கேட்டுவிட்டு செய்யலாம்

நாங்கள் குறிப்பிட்ட இந்த விஷயங்கள் புதியவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.