ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

இழுத்துக்கோ பறிச்சுக்கோ

கடந்த மூன்று வாரங்களாக இந்தப் பக்கத்தில் எதுவும் எழுத முடியவில்லை. மேலும் சந்தையின் போக்கும் மிக மோசமான அளவிற்கு எழுச்சியும் வீழ்ச்சியும் இருந்தது.

தங்கம் ஒரே நாளில் 600 புள்ளிகள் ஏறுவதும் இறங்குவதும், வெள்ளி 1500 புள்ளிகள் வரை ஏறவும் இறங்கவும் இருந்தது. செப்டெம்பர் மாதம் எப்பொழுதும் வீழ்ச்சியை காணும் தங்கமும், வெள்ளியும் இந்த வருடம் பெரும் எழுச்சியை கண்டது. காரணம் உலக பங்குசந்தையின் மந்த நிலையும், தொழில் வீழ்ச்சியுமே ஆகும். ஸ்திரமான ஆசிய சந்தை கூட இந்த மாதத்தில் தள்ளாடுகிறது. ஆக இதன் எதிரொலியாக தங்கத்திலும், வெள்ளியிலும், காப்பரிலும் முதலீடு அதிகரிக்கிறது.

காப்பர் ஏற வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அதனின் தேவை குறைந்துவிட்டது. இந்த நிலையில் தங்கத்தின் மீதான டிமாண்ட் காப்பரிலும் எதிரொலிக்கிறது.


குருடாயில் வர்த்தகத்தை Tug of Warஇல் ஒருபுறம் அமெரிக்காவும் மறுபுறம் ரஷ்யா, அரபுநாடுகள், வெனிசுலா போன்றவை மறுபுறமும் இழுக்கின்றன. இதில் சவூதி அரேபியா இருபுறம் நகர்ந்து ஜோக்கர் வேலையை பார்க்கிறது. ஆக குருடாயில் வர்த்தகம் ஒரு கண்ணாமூச்சியை நடத்துகிறது. பகலில் Buy செல்லுங்கள், இரவு 8.20 க்கு மேல் எத்தனை பொசிஷன் இருந்தாலும் வெளியில் வந்துவிடுவது நல்லது.

நேச்சுரல்கேஸ் பாதுகாப்பான வர்த்தகமாக இருக்கிறது. தினமும் நாலு புள்ளிகள் நகர்கிறது. உச்சியை தொட்டுவிட்டு கீழே இறங்கும் அல்லது அடியை தொட்டுவிட்டு மேலே ஏறும். நடுவில் Direction மாறாமல் ஒரே திசையில் செல்கிறது

பேஸ் மெட்டல்ஸ் ரெம்பவும் மேலே ஏறாது. ஆக மேலே வரும்போது Sell போவது நல்லது.

புதன், 7 செப்டம்பர், 2016

சதிராடும் குருடாயில்



கடந்த ஒரு மாதமாகவே குருடாயில் வர்த்தகத்தில் ஒரு தேக்கநிலையும் குழப்பமும் நிலவுகிறது. நாங்கள் எங்களுக்கு வரும் வர்த்தக செய்திகளின் அடிப்படையில் தான் ஆலோசனைகள் கொடுப்போம்.




சமீப காலமாக ரஷ்யா மற்றும ஆயில் உற்பத்தி நாடுகள் ஒருபுறமும், அமெரிக்கா ஒருபுறமும் கடும் பூசலில் இருக்கிறார்கள். சிலகாலம் முன்பு வரை எங்களுக்கு வரும் செய்திகள் எல்லாம் ஒரே திசையில் இருக்கும். இப்போது குருடாயில் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளோம் என்று OPEC Secretary General Mohammed Barkindo ஒரு புறம் சொல்வார். அதையே ரஷ்ய எனர்ஜி மினிஸ்டரும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று சொல்வார். ஆக குருடின் விலை ஏறப் போகிறது என்று நினைக்கும்போது சத்தமில்லாமல் அமெரிக்கா உப்புசப்பில்லாத காரணங்களால் ( US Job Claims Index Rise, Canadian Forex Rise) விலையை இறக்குவார்கள்.

நேற்று குருடாயில் ஸ்டாக் inventory ரிப்போர்ட் வரப்போகிறது என்று 8 மணிவரை காத்திருக்க கடந்த திங்கள் அமெரிக்க அரசு விடுமுறை என்பதால் இன்று இரவு எட்டு மணிக்கு வெளியாகும் என்கிறார்கள்.


அமெரிக்க அரசின் ஒரே நோக்கம் ரஷ்யாவின் வர்த்தகத்தை முழுமையாக வீழ்த்தி கிரிஸ்ஸின் நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்று வீம்பாக குருடாயிலை ஏறாமல் பார்த்துக்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இதற்கு அமெரிக்காவிற்கு தோள் கொடுத்த அரபு நாடுகளும் பொருளாதார சிக்கலை சந்திப்பதால் இப்போது உற்பத்தியை குறைக்கிறார்கள். இருந்தபோதும் ப்ரென்ட் ஆயிலின் உதவியால் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இந்த விலைக்குறைப்பு பிற இறக்குமதி நாடுகளுக்கும் சாதகமாக இருப்பதால் அமெரிக்காவிற்கு பெரிய எதிர்ப்பு இல்லை.

இந்த நிலையற்ற தன்மையின் காரணமாகவே கடந்த சில நாட்களாக நாங்கள் எந்த செய்தியையும் இங்கு பதியவில்லை. எங்கள் ஆப்பில் கொடுத்த callsகளும் தோல்வியை தழுவின.

வரும் 26 முதல் 28க்குள் ரஷ்யா தலைமையிலான ஆயில் உற்பத்தி செய்யாத நாடுகளுடன் சவூதி தலைமையிலான ஆயில் உற்பத்தி நாடுகள் கலந்தாய்வு நடத்த உத்தேசித்து இருக்கிறார்கள். அதுவரை இந்த குழப்பம் நீடிக்கும் என்று தான் சொல்கிறார்கள். மறுபுறம் அமேரிக்கா என்ன சதி செய்ய காத்திருக்கிறது என்று மர்மமாக உள்ளது

இன்று இரவு வரை குருடாயில் வர்த்தகத்தில் எந்த பெரிய மாற்றமும் இருக்காது. ஆகவே இரவு ஒரு புதிய பதிவு இடுவோம்

வியாழன், 1 செப்டம்பர், 2016

குருடாயில் அரசியல்

குருடாயில் அரசியல் மிகவும் சூடு பிடித்திருக்கிறது. ஒரு பக்கம் அமேரிக்கா, இன்னொரு பக்கம் ரஷ்யா, சவுதி, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் ( OPEC) . இந்த இரண்டுக்கும் நடுவிலான போட்டியில் அமெரிக்காவின் கரம் இப்போது ஓங்கி இருக்கிறது

நேற்று இரண்டு செய்திகள் பகலில் வந்தது. OPEC நாடுகள் கடந்த இரண்டாண்டுகளாக சந்தித்துவரும் பொருளாதார சரிவை மீட்க குருடாயிலின் உற்பத்தியை குறைத்தாக வேண்டிய சூழல் இருக்கிறது என்று கூட்டமைப்புகளின் செய்தி தொடர்பாளர் சொல்கிறார்.


மற்றொரு செய்தி குருடாயில் 45$க்கும் கீழே சென்றதால் அதன் லெவலை தொட மீண்டும் 45$ தொட மேலே எத்தனிக்கும் என்று. இந்தஇரண்டு செய்திகளும் நிச்சயம் குருடாயிலை ஏற்றி இருக்க வேண்டும்.

ஆனால் நேற்று நடந்ததே வேறு. குருடாயில் கீழே தள்ளப்பட்டது USD/CAD டாலர் விலை கடந்த மூன்று வாரத்தில் அதிக உச்சம் கண்டதும், US Jobless Claim Index மேலே உயர்ந்தது குருடாயிலை மேலும் கீழே தள்ளியது. இது அத்தனையும் அமெரிக்க அரசின் சித்து விளையாட்டுக்கள்.

இன்று ஆசிய சந்தையில் சின்னதாக ஏற்றம் கண்டாலும் இது கீழே தான் இறங்கக்கூடும். அப்படி ஒரு முடிவோடு செயல்படுகிறது அமெரிக்க சந்தை

நேற்று நாங்கள் கொடுத்த கால்ஸ் இரண்டும் சொதப்பியதன் பின்னணி இது தான். ஸ்டாப் லாஸ் வைத்ததால் பெரிய நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடிந்தது.

இன்று தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது. நூறு புள்ளிகள் கீழே இறங்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. மாலை மேலே நூற்றி இருபது புள்ளிகள் ஏறக்கூடும்