புதன், 7 செப்டம்பர், 2016

சதிராடும் குருடாயில்



கடந்த ஒரு மாதமாகவே குருடாயில் வர்த்தகத்தில் ஒரு தேக்கநிலையும் குழப்பமும் நிலவுகிறது. நாங்கள் எங்களுக்கு வரும் வர்த்தக செய்திகளின் அடிப்படையில் தான் ஆலோசனைகள் கொடுப்போம்.




சமீப காலமாக ரஷ்யா மற்றும ஆயில் உற்பத்தி நாடுகள் ஒருபுறமும், அமெரிக்கா ஒருபுறமும் கடும் பூசலில் இருக்கிறார்கள். சிலகாலம் முன்பு வரை எங்களுக்கு வரும் செய்திகள் எல்லாம் ஒரே திசையில் இருக்கும். இப்போது குருடாயில் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளோம் என்று OPEC Secretary General Mohammed Barkindo ஒரு புறம் சொல்வார். அதையே ரஷ்ய எனர்ஜி மினிஸ்டரும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று சொல்வார். ஆக குருடின் விலை ஏறப் போகிறது என்று நினைக்கும்போது சத்தமில்லாமல் அமெரிக்கா உப்புசப்பில்லாத காரணங்களால் ( US Job Claims Index Rise, Canadian Forex Rise) விலையை இறக்குவார்கள்.

நேற்று குருடாயில் ஸ்டாக் inventory ரிப்போர்ட் வரப்போகிறது என்று 8 மணிவரை காத்திருக்க கடந்த திங்கள் அமெரிக்க அரசு விடுமுறை என்பதால் இன்று இரவு எட்டு மணிக்கு வெளியாகும் என்கிறார்கள்.


அமெரிக்க அரசின் ஒரே நோக்கம் ரஷ்யாவின் வர்த்தகத்தை முழுமையாக வீழ்த்தி கிரிஸ்ஸின் நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்று வீம்பாக குருடாயிலை ஏறாமல் பார்த்துக்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இதற்கு அமெரிக்காவிற்கு தோள் கொடுத்த அரபு நாடுகளும் பொருளாதார சிக்கலை சந்திப்பதால் இப்போது உற்பத்தியை குறைக்கிறார்கள். இருந்தபோதும் ப்ரென்ட் ஆயிலின் உதவியால் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இந்த விலைக்குறைப்பு பிற இறக்குமதி நாடுகளுக்கும் சாதகமாக இருப்பதால் அமெரிக்காவிற்கு பெரிய எதிர்ப்பு இல்லை.

இந்த நிலையற்ற தன்மையின் காரணமாகவே கடந்த சில நாட்களாக நாங்கள் எந்த செய்தியையும் இங்கு பதியவில்லை. எங்கள் ஆப்பில் கொடுத்த callsகளும் தோல்வியை தழுவின.

வரும் 26 முதல் 28க்குள் ரஷ்யா தலைமையிலான ஆயில் உற்பத்தி செய்யாத நாடுகளுடன் சவூதி தலைமையிலான ஆயில் உற்பத்தி நாடுகள் கலந்தாய்வு நடத்த உத்தேசித்து இருக்கிறார்கள். அதுவரை இந்த குழப்பம் நீடிக்கும் என்று தான் சொல்கிறார்கள். மறுபுறம் அமேரிக்கா என்ன சதி செய்ய காத்திருக்கிறது என்று மர்மமாக உள்ளது

இன்று இரவு வரை குருடாயில் வர்த்தகத்தில் எந்த பெரிய மாற்றமும் இருக்காது. ஆகவே இரவு ஒரு புதிய பதிவு இடுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக