செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

MCX இல் கணக்கு தொடங்குவது எப்படி

MCX எனப்படும் பொருள் வணிகத்தில் வர்த்தகம் செய்ய தனியே கணக்கு தொடங்கவேண்டும். பங்கு வர்த்தகத்தில் உள்ள Demat கணக்கு இதற்கு பொருந்தாது

இந்தியா முழுக்க 2400க்கும் அதிகமான Brokerage Companyகள் MCX இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்றில் கணக்கை தொடங்கலாம்.

அதற்கு பின்வரும் ஆவணங்கள் உங்களிடம் இருக்க வேண்டும்

1. Address Proof
2. Id Proof
3. Pan Card
4. Cancelled Cheque / Recent Bank Statement
5. Photo

Cancelled Cheque - என்பது உங்கள் வங்கி காசோலையை குறுக்கே அடித்து CANCELLED என்று பெரிதாக எழுதவேண்டும்.

இவற்றுடன் நீங்கள் கணக்கு தொடங்கும் Brokerage Companyயின் விண்ணப்பபடிவத்தையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

பொதுவாக Brokerage Companyகளை அணுகினால் அவர்களின் விற்பனை பிரதிநிதிகள் உங்களை தேடிவந்து அனைத்தையும் செய்து கொடுப்பார்கள்.

பெரிய Brokerage கம்பெனிகள் இதற்கு தனியே உங்களிடம் கட்டணம் வசூலிப்பார்கள். Brokerage Charge மிக அதிகமாக சொல்வார்கள்.
0.03% முதல் 0.07% வரை சொல்வார்கள்.

இன்னும் சில கம்பெனிகள் முன்னரே உங்களிடம் Brokerage Commission 5000 முதல் 10000 வரை வாங்கிகொள்வார்கள். அதற்கு 0% brokerage என்று சொல்வார்கள். ஆனால் எதுவும் ஜீரோ அல்ல, தந்திரம். நீங்கள் வர்த்தகம் செய்தாலும் செய்யாவிட்டாலும் ஒரே வர்த்தகத்தில் நீங்கள் வெளியேற முடிவு செய்தாலும் இந்த advanced brokerage commission திரும்பி வரவே வராது.

போதாதென்று உங்களிடம் Margin Cheque ஒன்றையும் வாங்கி கொள்வார்கள். அதாவது ஒரு அதிரடி இறக்கத்தில் மாட்டி உங்கள் கணக்கில் உள்ள தொகை அத்தனையும் கழிந்தது போக மைனஸ்ஸில் சென்றால் அதை பைசா மிச்சமில்லாமல் கறந்துவிடுவார்கள். தப்பித்தவறி கூட அவர்களுக்கு நஷ்டம் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அதில் தவறில்லை தான். ஆனால் சில சமயம் அவர்கள் தரப்பில் தவறுகள் இருந்தாலும் பலியாடு நீங்கள் தாம்.

ஒரு கம்பெனியில் MCX கணக்கு தொடங்கும் முன் கீழ்காணும் விஷயங்களில் கறாராக இருங்கள்

1. Advanced Brokerage Commission கொடுக்காதீர்கள்
2. கணக்கு தொடங்குவதற்கு 300 முதல் 750 வரை கேட்பார்கள். கொடுக்காதீர்கள். நிறைய கம்பெனிகள் இதை இலவசமாக செய்கிறார்கள்
3. சரியான விளக்கமில்லாமல் Margin Cheque கொடுக்காதீர்கள்
4. 0.03% க்கும் மேல் Brokerage Commission கொடுக்காதீர்கள். பேசினால் குறைப்பார்கள்
5. உங்களிடம் ஆவணங்களை வாங்கி பத்து நாட்களுக்குள் கணக்கு தொடங்கவில்லையென்றால் விளக்கம் கேளுங்கள். பதில் திருப்தியாக இல்லையென்றால் திரும்ப தந்துவிட வற்புறுத்துங்கள்.
6. Payout எனப்படும் பணத்தை மீண்டும் உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும் விசயத்தில் 24 மணி நேரத்திற்கு மேல் தாமதிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருங்கள். (வார இறுதியை தவிர்த்து)

பெரிய கம்பெனிகளிடம் சில வசதிகளும் உண்டு

1. சில கம்பெனிகள் Chart இலவசமாக கொடுப்பார்கள்.
2. Mobile Trading வசதி செய்துகொடுப்பார்கள்
3. PayIn எளிதாக இருக்கும். உங்கள் MCX கணக்குடன் Online Payment Method இணைக்கப்பட்டிருக்கும். ஆகவே அவசரமாக உங்கள் கணக்கில் பணம் செலுத்தி வர்த்தகம் செய்ய முடியும். சிறிய கம்பெனிகளில் நீங்கள் பணம் செலுத்திய பிறகு அவர்களுக்கு போனில் அழைத்து சொல்லவேண்டும்.

சிறிய கம்பெனிகளிடம் உள்ள வசதிகள்

1. Account Opening Charge இருக்காது. Account Opening நடைமுறை மிக எளிதாக இருக்கும். ஒரே நாளில் கூட கணக்கை தொடங்கிவிடலாம்.
2. Brokerage Commission மிக குறைவாக இருக்கும்.
3. Margin Cheque கட்டாயம் கிடையாது. Limit அதிகம் கேட்டீர்கள் என்றால் இதை கேட்பார்கள்.
4. Payout பெரும்பாலும் ஒரே நாளில் செய்துவிடுவார்கள்.
5. Limit நீங்கள் விரும்பிய அளவு கொடுப்பார்கள். Limit அதிகம் எடுக்கும் போது இரண்டு பக்கமும் ரிஸ்க் இருக்கிறது.
6. Support மிக நன்றாக இருக்கும். அவர்களை பொறுத்தவரையில் ஒரு கஸ்டமர் கூட விட்டுச்சென்றுவிடக் கூடாது என்று நினைப்பார்கள்
7. எந்நேரம் கால் செய்தாலும் பொதுவாக லைன் கிடைக்கும்.


Limit என்பது குறைவான முதலீட்டில் அதிக அளவு கொள்முதல் செய்ய முடியும். பொதுவாக பெரிய நிறுவனங்களில் உங்கள் கணக்கில் உள்ள பணத்திற்கு 60% மேல் நஷ்டம் வரும்போது வர்த்தகத்தை அவர்களே முடித்துவைத்து வெளியேற்றிவிடுவார்கள். இதுவே சிறிய நிறுவனங்களில் அவர்களுடன் நல்ல நட்பில் இருந்தால் 80% ஏன் அதற்கும் மேலும் கூட ரிஸ்க் எடுத்து செய்வார்கள்.

கணக்கு தொடங்கியவுடன் நீங்கள் எந்த வங்கியின் காசோலையை கொடுத்தீர்களோ அதே வங்கியில் இருந்து காசோலை மூலமாகவோ அல்லது Net Banking மூலமாக NEFT / RTGS / Interbank Transfer மூலமாக செய்யலாம். IMPS செய்யும் போது Reference Number ஐ தவிர்த்து அனுப்பியவர் பெயர் வருவதில்லை. ஆகவே நிறுவனத்திடம் கேட்டுவிட்டு செய்யலாம்

நாங்கள் குறிப்பிட்ட இந்த விஷயங்கள் புதியவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக